முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் அ.தி.மு.க எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச.2 - முல்லைப் பெரியாறு அணையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 142 அடிக்கு தண்ணீரை நிரப்ப கேரள அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கூறி டெல்லியில் அ.தி.மு.க. எம்.பிக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீரை தேக்கி வைக்க சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே ஆணையிட்டுள்ளது. ஆனால் இந்த ஆணையை அமல்படுத்தும் வகையில் கேரள அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் 142 அடி தண்ணீரை தேக்கி வைக்க கேரள அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனக் கோரி டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே அ.தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் தம்பிதுரை, மாநிலங்களவை அ.தி.மு.க. குழு தலைவர் மைத்ரேயன் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க. எம்.பிக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டிக்கும் வகையில் அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். மேலும் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் அரசின் முடிவை வாபஸ் பெற வேண்டும் எனக் கோரியும் அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நாடாளுமன்ற மற்றும் மக்களவை அ.தி.மு.க. எம்.பிக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்