முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிசம்பர் 21-ந் தேதி கேரளா செல்லும் வாகனங்கள் முற்றுகை

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.2 - முல்லைப்பெரியாரைக் காக்கப் போராட்டங்கள் நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார். இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-​தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் கச்சை கட்டிக்கொண்டு பல்வேறு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. 

தமிழகத்தில் நாம், எல்லை மீறிய பொறுமையை கடைபிடித்து வருகிறோம். குட்டக் குட்டக் குனியும் நிலைக்கு நாம் ஆளாகிவிடக்கூடாது. நமக்கு உரிமையுள்ள முல்லைப் பெரியாறு அணையின் வலிமை குறித்தும், உண்மை நிலை குறித்தும் தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர்கள் தயாரித்துள்ள குறுந்தட்டுகள் தமிழகம் முழுவதிலும் விநியோகிக்கப்பட வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையைக் காக்கும் பிரச்சாரப் பயணத்தை நானும், முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் கம்பம் அப்பாஸும்,  டிசம்பர் 7 தேதி, மதுரையில் இருந்து கூடலூர் வரை மேற்க்கொள்கிறோம். டிசம்பர் 8 ஆம் தேதி அன்று முல்லைப் பெரியாரைக் காக்க கம்பம் நகரில் என்னுடைய தலைமையில், கம்பம் அப்பாஸ் முன்னிலையில் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும். பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைப்பார். விவசாய சங்கத்

தலைவர்களும், பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும் போராட்டத்தை ஆதரித்துப் பேசுவார்கள். அண்ணன் பழ.நெடுமாறன் உண்ணாவிரதத்தை நிறைவு செய்வார்.

கேரளம் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்துகின்ற முற்றுகைப் போராட்டம் ஜனவரி 21 ஆம் தேதி நடத்துவதாக திருச்சியில் அறிவித்து இருந்தோம். தற்போது அந்தப் போராட்டம் டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என்றும், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற கட்சிகள், அமைப்புகள் அனைவரும் இப்போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும், தமிழ்நாட்டின்

உரிமையைக் காக்க இந்தப் போராட்டங்களுக்கு விவசாயிகளும் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்