முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்காவில் அமைச்சர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை நவ-2 - கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்காவை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று மாலை ஆய்வு செய்தார். ஆய்வுக்குப்பின்னர் அவர் தெரிவித்ததாவது:

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில்  அமைக்கபட்டுள்ள தகவல் தொழில்நுட்ப பூங்காவை தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி ஆய்வு செய்வதற்காக வந்தேன். மத்திய அரசின் ஒத்துழைப்போடு இதனை மேம்படுத்த உரியநடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொள்வார். நெல்லை மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்து. இங்கு என்ன தொழில்கள் தொடங்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். முதல்வர் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார். மேலும் கங்கைகொண்டான் தகவல் தொழில்நுட்ப பூங்காவை மேம்படுத்த முதல்வர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வார் என்று அவர் தெரிவித்தார். ஆய்வின்போது அமைச்சர் செந்தூர்பாண்டியன், நெல்லை சட்டமன்ற  உறுப்பினர் நயினார்நாகேந்திரன், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஜி.ராஜேந்திரன், நெல்லை மாநகராட்சி மேயர் விஜிலா சத்யானந்த், துணைமேயர் ஜெகநாதன், மாவட்ட ஊராட்சி தலைவர் நாராயணபெருமாள், மாவட்ட ஆட்சியர் செல்வராஜ், செயலாளர் டாக்டர் சந்தோஷ், எல்காட் நிர்வாக இயக்குனர் 

அதுல்ஆனந்த், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தச்சை ராஜா, முருகேசன், ராமசுப்பிரமணியன், செங்கோட்டை நகர்மன்ற உறுப்பினர் குட்டியப்பா ஆகியோர் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்