முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - மே.இ. தீவு விசாகப்பட்டினத்தில் இன்று மோதல்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

விசாகப்பட்டினம், டிச.2 - இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பகலிரவாக நடக்கிறது. இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடரு மா? 

கேப்ட ன் டேரன் சம்மி தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் தோனி தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையே முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் இந்திய அணி 2 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 

இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 5  போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் போட்டி ஒரிசா மாநிலத்தில் உள்ள கட்டாக் நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. 

கட்டாக்கில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 1 விக்கெ ட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொ டரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

இந்நிலையில் இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயா  ன 2 -வது ஒரு நாள் போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள துறைமுக நக ரமான விசாகப்பட்டினத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு இந்தப் போட்டி துவங்குகிறது. 

முன்னதாக நடந்த முதல் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது. ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா இருவரும் மட்டும் சிறப்பாக ஆடினர். இவர்களது பேட்டிங்காலும், கடைசி விக்கெ ட் ஜோடியின் ஆட்டத்தாலும் இந்திய அணி இழுபறியில் வெற்றி பெற்றது. 

முதல் போட்டியில் காம்பீர், விராட் கோக்லி, ரெய்னா ஆகியோர் பேட்டிங் மிக மோசமாக இருந்தது. உமேஷ் யாதவ் மற்றும் வருண் ஆரோன் இருவரும் சிறப்பாக பந்து வீசினர். தவிர, கடைசி நேரத்தில் வெற்றிக்கான ஷாட்டையும் அடித்தனர். 

கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பி பரபரப்பான நிலையில் வெற்றி பெற்றது. எனவே கேப் ட ன் சேவாக் தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. அவரது அதி ரடி ஆட்டத்தையும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 

மேற்கு இந்தியத் தீவுகள் அணி முதல் போட்டியில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டதால், இந்தப்  போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடும். எனவே இன்றைய போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தா க இருக்கும். 

மே.இ.தீவு அணியில் பிராவோ, சாமுவேல்ஸ் மற்றும் லெண்டில் சிம் மன்ஸ் நல்ல நிலையில் உள்ளனர். பெளலிங்கில் கேமர் ரோச் மற்றும் கேப்டன் டேரன் சம்மி ஆகியோர் நன்றாக பந்து வீசி வருகிறார்கள். 

கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் மே.இ.தீவு அணி பேட்டிங்கில் சொதப்பினாலும், பெளலிங்கில் கலக்கியது. குறைந்த ஸ்கோரைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய அணி பெரும் போராட்டத்திற்கு ப் பிறகே வெற்றி பெற்றது. 

இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான 2 -வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி தூர்தர்ஷன் மற்றும் நியோ கிரிக்கெட் சேனலில் நேரடி ஒளிபரப்பு ஆகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்