முக்கிய செய்திகள்

மக்கள் விரோத போக்கை சுட்டி காட்டி பிரசாரம் - பொன். ராதா கிருஷ்ணன்

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      தமிழகம்
pon radha  0

நாகர்கோவில்-மார்ச். 12 - தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவரான பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறார். இது தொடர்பாக அவர் நேற்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:- தமிழ் நாட்டில் 131 தொகுதிகளில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியினர் தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஸ்பெக்ட்ரம் ஊழல், விலைவாசி உயர்வு போன்றவை குறித்து தேர்தல் பிரசாரம் செய்வோம். மக்களிடம் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியின் ஊழல் தொடர்புகளை அம்பலப்படுத்துவோம். தி.மு.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளையும் தோற்கடிப்போம். நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடும் நான் வேட்பு மனு தாக்கல் செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறேன். இன்னும் இரண்டொரு நாளில் இது குறித்து முடிவு செய்தபின் அடுத்த வாரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்வேன். அதன் பின்பு தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்ய உள்ளேன். நாகர்கோவில் தொகுதியில் மக்களின் குறைகள், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவேன். தேர்தல் பிரசாரத்துக்காக பாரதீய ஜனாத மூத்த தலைவர் அத்வானி, அகில இந்திய தலைவர்கள் நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: