முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெகுராவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது: சி.பி.ஐ. எதிர்ப்பு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, டிச.3 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் தொலைத் தொடர்பு துறை செயலாளர் சித்தார்த்த பெகுரா, தன்னை ஜாமீனில் விடக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய சி.பி.ஐ. கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவரை ஜாமீனில் விடுதலை செய்தால் முன்னாள் அமைச்சர் ராசாவும் அதே அடிப்படையில் தனக்கும் ஜாமீன் கோருவார். எனவே சித்தார்த்த பெகுராவை ஜாமீனில் விடுதலை செய்யக் கூடாது என்று சி.பி.ஐ. டெல்லி ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது. 

இது குறித்து நீதிபதி வி.கே. ஷாலி தலைமையிலான பெஞ்ச் முன்பு சி.பி.ஐ. க்காக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் கூறுகையில், இந்த வழக்கில் அரசு ஊழியர்களின் பங்கு பற்றி தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட பெகுராவுக்கு ஜாமீன் கொடுத்தால் அதே அடிப்படையில் ராசா போன்றவர்களும் ஜாமீன் கேட்பார்கள். எனவே பெகுராவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வாதிட்டார். அப்போது பெகுராவுக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமன்லெக்கி தன்னுடைய வாதத்தை எடுத்துரைத்தார். சி.பி.ஐ. தெரிவித்த எதிர்ப்புக்கு இவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். பெகுராவை இந்த வழக்கில் ஒரு பலிகடாவாக ஆக்க கூடாது என்று வாதிட்டார். 

ஜாமீன் கொடுக்கும் விஷயத்தில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால் பெகுராவுக்கு ஜாமீன் கொடுக்க கூடாது என்று சி.பி.ஐ. எப்படி சொல்லலாம். அவருக்கு கொடுத்தால் ராசாவும் கேட்பார் என்று வாதிடுவதும் அர்த்தமற்றது. எனவே இந்த விஷயத்தில் சி.பி.ஐ. யின் விளக்கத்தை நான் கேட்கிறேன் என்று வழக்கறிஞர் அமன்லெக்கி வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் நீதிபதி ஷாலி கேட்டுக் கொண்டார். பெகுராவின் ஜாமீன் விவகாரத்தில் விரைவில் அவர் ஒரு உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னதாக, தன்னை ஜாமீனில் விடக் கோரிய பெகுரா, சுப்ரீம் கோர்ட்டும், இதர கோர்ட்டுகளும் இந்த வழக்கில் சிலருக்கு ஜாமீன் கொடுத்து விட்டன. அந்த அடிப்படையில் தன்னையும் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் சி.பி.ஐ. இந்த வாதத்தை ஏற்பதாக தெரியவில்லை. 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் பல்வேறு நீதிமன்றங்களால் 5 நிறுவன அதிகாரிகள், கனிமொழி, சரத்குமார், சந்தோலியா உட்பட இதுவரை 12 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜாமீனில் விடுதலையான கனிமொழி இன்று 3 ம் தேதி சென்னை திரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்