முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை கோவிலில் பக்தர்கள் வேடத்தில் பயங்கரவாதிகள் ?

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சென்னை, டிச.3 - சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது கார்த்திகை மாதத்தை முன்னிட்டு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. மாலையணிந்து விரதம் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் சபரிமலைக்கு சென்று வந்த வண்ணம் உள்ளனர். வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பக்தர்களை சன்னிதானத்தில் ஒழுங்குபடுத்துவதற்கு கேரள போலீஸ் தனிப்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் போலீசாரால் மட்டுமே சபரிமலை சன்னிதானம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை செய்ய முடிவதில்லை. எனவே பக்தர்களும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சேவை மனப்பான்மையுடன் இந்த பணிகளில் ஈடுபடும் பக்தர்கள், தாங்கள் எந்த ஊரை சேர்ந்தவர்களோ அந்த பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தில் தங்களது நடத்தை பற்றிய சான்றிதழ் பெற்று கொடுக்க வேண்டும். அந்த சான்றிதழ் வைத்து இருப்பவர்களையே சபரிமலை ஐயப்பன் கோவில் சேவைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமானோர் சபரிமலையில் சன்னிதானத்தில் பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பயங்கரவாதிகள் ஊடுருவி நாச வேலை செய்ய முயன்று வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சபரிமலையில் சேவையில் ஈடுபடுபவர்கள் போர்வையில் பயங்கரவாதிகள் ஊடுருவும் வாய்ப்பு இருப்பதாக அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் சபரிமலையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள சேவையாளர்களில் பெரும்பாலானவர்கள் மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவர்களுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம். எனவே தமிழ்நாட்டு சேவையாளர்கள் விஷயத்தில் உஷாராக இருங்கள் என்றும் எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர மாவோயிஸ்டு அமைப்பை சேர்ந்தவர்களும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சபரிமலையில் சேவை செய்பவர்கள் வேடத்தில் ஊடுருவ கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை மத்திய உள்துறை கேரளாவுக்கு அனுப்பியது. அதன் பேரில் கேரள போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலை சன்னிதானம் மற்றும் வழிநடை பகுதிகளில் சேவை செய்து வரும் தமிழ்நாட்டு பக்தர்களின் அடையாள அட்டைகள் வாங்கி சரிபார்க்கப்பட்டன. அப்போது 300 பக்தர்கள் போலி அடையாள அட்டை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. 

அவர்களது நத்தை குறித்து போலீசார் அளித்துள்ள சான்றிதழ்களும் காலாவதியானவை என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட பக்தர்கள் சேவை பணியில் இருந்து விலக்கி சபரிமலை தேவஸ்தானம் திருப்பி அனுப்பி விட்டது. மற்ற சேவையாளர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்திய உளவுத் துறை விடுதலை புலிகளுடன் தமிழ்நாட்டு பக்தர்களை தொடர்பு படுத்தி தகவல்கள் வெளியிடுவது பக்தர்கள் மனதில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago