முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிஸ்பேன் டெஸ்ட்: நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 295 ரன்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

பிரிஸ்பேன், டிச. 3 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிஸ்பேன் நகரில் நடந்து வரும் முத லாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 295 ரன்னில் ஆட்டம் இழந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் முன்னாள் கேப்டன் வெட்டோரி 4 ரன் வித்தியாசத்தில் சதவாய்ப்பை நழுவ விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத் தை அளித்தது. வெட்டோரியும், பிரவுன்லைன் இருவர் மட்டுமே தாக் குப் பிடித்து ஆடி அரை சதத்தை தாண்டினர். 

ஆஸ்திரேலிய அணி சார்பில், லையான் சிறப்பாக பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். சிட்லே, ஸ்டார்க் மற்றும் பட்டின்சன் ஆகியோர் அவருக்குப் பக்கபலமாக பந்து வீசினர். 

நியூசிலாந்து அணி கேப்டன் டெய்லர் தலைமையில் ஆஸ்திரேலியாவி ல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்டன் மைக்கேல் கிளார்க் தலை மையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.  ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப்பட்டது. இதன் முதல் போட்டி பிரிஸ்பேன் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் 1 -ம் தேதி துவங்கியது. 

இதில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி ரன் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி முதல் இன்னிங்சில் 82.5 ஓவ ரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 295 ரன்னை எடுத்தது. நியூசிலாந்து அணியின் இன்னிங்சில் முன்னாள் கேப்டன் வெட்டோரி சத வாய்ப்பை தவறவிட்டார். அவர் 127 பந்தில் 96 ரன் எடுத்து இருந்த நிலையில் ரன் அவுட்டானார். 186 நிமிடம் களத்தில் இருந்த அவர் மொத்தம் 9 பவுண்டரி அடித்தார். 

அடுத்த படியாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பிரவுன்லைன் 173 பந்தில் 77 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 248 நிமிடம் களத்தில் இருந்த அவர் மொத்தம் 8 பவுண்டரிகளை விளாசி னார். தவிர, மெக்குல்லம் 51 பந்தில் 34 ரன்னையும், வில்லியம்சன் 19 ரன்னையும் எடுத்தனர். 

பிரவுன் லைனும், முன்னாள் கேப்டன் வெட்டோரியும் இணைந்து 6-வது விக்கெட்டிற்கு 158 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தி ல் நியூசிலாந்து அணி 96 ரன்னிற்கு 5 விக்கெட்டை இழந்து தடுமாறிக் கொண்டு இருந்தது. பின்பு இருவரது ஆட்டத்தால் அந்த அணி சரிவில் இருந்து மீண்டு கெளரவமான ஸ்கோரை எட்டியது. ஆஸ்திரேலிய அணி தரப்பில், லையான் 69 ரன்னைக் கொடுத்து 4 விக் கெட் எடுத்தார். சிட்லே 57 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ஸ்டார்க் 90 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பட்டின் சன் 1 விக்கெட் எடுத்தார். 

முன்னதாக நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 51 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்னை எடுத்து இருந்தது. அப் போது பிரவுன்லைன் 32 ரன்னுடனும், வெட்டோரி 45 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

2 -ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த நியூசிலாந்து அணி 295 ரன்னில் ஆட்டம் இழந்தது. பின்பு முதல் இன்னிங்சை ஆடிய ஆஸி. அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில், 46 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன் னை எடுத்து இருந்தது. அப்போது பாண்டிங் 67 ரன்னுடனும், கிளார்க் 28 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்