முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் 15 கோடிக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார்

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

 

சென்னை, டிச.3 - அமைச்சர் எம்.சி.சம்பத், 15 கோடியை 41 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஜெயலலிதாவிடம் வழங்கினார். தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவிடம் நேற்று (2.12.2011) தலைமைச் செயலகத்தில், 2010​2011​ ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்தின் அரசுக்கான நியமன கட்டணத் தொகை 14 கோடியே 39 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகத்தின்  பங்குத் தொகை 87 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், தமிழ்நாடு சிறு தேயிலை விவசாயிகளின் தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இணைய நிறுவனம் பங்குத் தொகை 15 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, என மொத்தம் 15 கோடியே 41 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கான வரைவுக் காசோலைகளை ஊரக தொழில் மற்றும் சத்துணவு அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்தின் (டான்சி) 2010  2011ஆம் ஆண்டுக்கான 15 ரூ நியமனக் கட்டணத் தொகை 14 கோடியே 39 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகத்தின் (சிட்கோ)  2010 - 2011 ஆம் ஆண்டுக்கான 10 ரூ ஆதாயப் பங்குத் தொகை 87 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும், தமிழ்நாடு சிறு தேயிலை விவசாயிகளின் தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இணைய நிறுவனத்தின் 2010 - 2011  ஆம் ஆண்டுக்கான 14 ரூ ஆதாயப் பங்குத் தொகை 15 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையையும், மொத்தம் 15 கோடியே 41 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய்க்கான வரைவுக் காசோலையை மாண்புமிகு ஊரக தொழில் துறை மற்றும் சத்துணவு அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது தலைமைச் செயலாளர், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர்,  தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்தின் (டான்சி) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி கழகத்தின் (சிட்கோ) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்