முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் வணிகத்துறை பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.3 - வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத்துறை பணிகள் குறித்து அமைச்சர் செ.தாமோதரன் ஆய்வு செய்தார்.இதுகுறித்து தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் பணிகள் குறித்து வேளாண்மைத் துறை அமைச்சர் செ. தாமோதரன் ஆய்வு வேளாண்மைத் துறை அமைச்சர் செ.தாமோதரன் நேற்று வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை பணிகள் குறித்து, சென்னை, கிண்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். 

இக்கூட்டத்தில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் செயலாளர் சந்தீப் சக்சேனா, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையர் தங்க கலியபெருமாள், மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனார்.  ஆய்வின்போது அத்துறையின் அதிகாரிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசனையின்படி வேளாண் உற்பத்தியை இருமடங்காக பெருக்கவும், விவசாயிகளின் வருமானத்தை மூன்று மடங்காக அதிகரிக்கவும் துறையினர் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும், இத்துறையின் அலுவலர்கள் வெளி சந்தையின் விவரங்களையும் சந்தையின் எதிர்காலம் மற்றும் நிகழ்கால விலை விவரங்களை புலனாய்வு செய்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டார்.  ​​

மேலும் விவசாயிகள் சந்தை சாந்த விவசாயம் செய்ய துறையினர் ஆலோசனை வழங்குவதோடு நில்லாமல் அறுவடைக்கு பின் உள்ள தொழில்நுட்பம் மற்றும் மதிப்பு கூட்டிய விளைபொருட்களை தயார் செய்து அவர்களது திறனை வளாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். இதன் மூலம் விளைபொருட்களுக்கு உயர் விலை கிடைக்கவும் அதன் மூலம் விவசாயிகள் வருமானத்தை பெருக்கவும் வழி வகுக்கும் என  வேளாண்மைத் துறை அமைச்சர் கருத்து தொவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்