முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல்: கவர்னர் உறுதி

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

பெரியபாளையம், டிச.3 - இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர் தாக்கப்படும் பிரச்சனைக்கு தீர்வுகாண தமிழக அரசுக்கு அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று கவர்னர் ரோசைய்யா கூறினார். தமிழக கவர்னர் ரோசைய்யா தனது குடும்பத்துடன் பெரியபாளையம் பவானி அம்மன் திருக்கோயிலுக்கு நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தார். கவர்னருக்கு கோயில் உதவி ஆணையர் மற்றும் தக்கார் பத்மநாபன் தலைமையில், செயல் அலுவலர் லஷ்மிகாந்தன், மேலாளர் வெங்கட் மற்றும் பணியாளர்கள் சார்பாக பூரண கும்பமரியாதையுடன் அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் வரவேற்பு அளித்தனர்.  

மேலும் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிகுழுத்தலைவர் ரவிச்சந்திரன் எல்லாபுரம் ஒன்றிய சேர்மன் அம்மினி மகேந்திரன், பெரியபாளையம் ஊராட்சிமன்ற தலைவர் ராஜா ஆகியோர் சால்வை அணிவித்து கவர்னருக்கு வரவேற்பு அளித்தனர்.  

அதன்பின் கவர்னர் அவரது மனைவி சிவலஷ்மி மூத்த மருமகள் பேபி சுவலட்சலாபேரன் ஹர்சா மற்றும் அவரது உறவினர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். அதை தொடந்து கோயிலின் வரலாறு சம்மந்தமாக கவர்னர் கேட்டறிந்தார். இதனால் மூலவர் சுயம்புவாக உருவான கதையை அரசகர்கள் விளக்கி கூறினர்.  

இதனால் சுயம்புவையும் மீண்டும் தரிசனம் செய்தார். அதன்பின் பிரகாரத்தை சுற்றிவந்தனர். இலங்கை ராணுவம் தமிழக மீனவரகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறித்து ஏதாவது கூறுங்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கவர்னரிடம் கேட்டனர்.  அதற்கு தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அப்பிரச்சனையை சுமூகமாக தீர்க்க மத்திய அரசு தமிழக அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என்று கவர்னர் பதில் கூறினார்.  

இதன்பின் கவர்னர் காரில் புறப்பட்டு சென்னை சென்றார். கவர்னருடன் திருவள்ளூர் மாவட்ட சப்​கலெக்டர் சித்திரசேனன், ஊத்துக்கோட்டை தாசில்தார் பிரசன்னா ஆகியோர் இருந்தனர். ஏ.டி.எஸ்.பி.செந்தில்குமார் தலைமையில் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி பாரதி முன்னிலையில் போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்