முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சைதாப்பேட்டையில் இலவச சைக்கிள் வழங்கும் விழா

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.3 - சைதாப்பேட்டை தொகுதியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிளை செந்தமிழன் எம்.எல்.ஏ வழங்கினார். தென் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை தொகுதி மாதிரி மேனிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கி தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பு.செந்தமிழன் ஆற்றிய உரை வருமாறு:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய சிந்தனையில் தோன்றிய மாணவ​மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவ​மாணவிகளுக்கு வழங்குகின்ற இந்த வாய்ப்பினை தந்த ஜெயலலிதாவின்பொற் பாதங்களுக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் சமரப்பிக்கின்றேன்.

ஜெயலலிதா இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக்க ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கு மேல் உழைக்கின்றார். கல்வியிலே முதல் மாநிலமாக திகழ மாணவ​மாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணாக்கர்களிடையே அவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையிலும் இடைநிற்றலைத் தவிரக்கும் பொருட்டும் இணைப்புப் பயிற்சி நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக 65 கல்வி மாவட்டங்களில் மாணவரகளின் நலன்களைப்பேணும்வகையில் இயன் மருத்துவ முகாம் ( பிசியோதெரபி ) நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மாணாக்கர்களின் உடல்நலம் மனநலம் பேணும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது.

சமூக பொருளாதார அடுக்கின் அடித்தட்டுப் பிரிவைச் சாரந்த மாணவ மாணவியர வளர்ந்து வரும் உலக தகவல் தொழில்நுட்ப வளரச்சியில் பங்கு கொள்ள ஏதுவாக ரூ.912 கோடி இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்து அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் பல்கலை தொழில் நுட்ப பயிலகங்களில் படிக்கும் மாணவ மாணவியற்கு இலவச மடிக்கணினி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

ஆதிதிராவிட பள்ளி மாணவ மாணவியருக்கு தற்போது வழங்கப்படும் மாத உணவுப்படி ரூ.450 இல் இருந்து 650 ரூபாயாக உயரத்தி வழங்க உத்தரவிட்டுள்ளார. கல்லூரி மாணவ மாணவியருக்கு 550 இல் இருந்து ரூ. 750 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

10 இலட்சம் ஆதிதிராவிட மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மெட்ரிக்படிப்பிற்கு மேற்பட்ட உயர படிப்பிற்கு கல்வி உதவித் தொகை வழங்க 238.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிக் குழந்தைகளுக்கு 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கவும் 6ஆம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டையும் மாணவியருக்கு பாவாடை தாவணிக்குப் பதிலாக சல்வார்கமீசும் வழங்க ஆணையிட்டுள்ளார். இந்த சீருடை வழங்கும் திட்டத்திற்காக ரூ.202 கோடி நிதி ஒதுக்கி  முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் வேலை வாய்ப்பகங்களுக்கு சென்று பதிவு செய்ய சிரமப்படாமல் அவரவர படிக்கின்ற பள்ளிகளிலேயே ஆன்லைன் வாயிலாக நேரடி பதிவு செய்யவும் பள்ளியில் பயிலுகின்ற மாணவ மாணவிய அவரவர் பயிலுகின்ற பள்ளிகளிலே தங்களுடைய இருப்பிடச் சான்றிதழ் சாதி சான்றிதழ் வருமான சான்றிதழ் பெற்று கொள்ளும் வசதியினை ஏற்புடுத்தி தந்துள்ளார். மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் இலவச பஸ் பாஸ் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை ரூ. 1500 மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு ரூ.2000 வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையிலுள்ள அரசு அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உணவுக் கட்டணத்தை 800 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தி வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

மாணவ மாணவிகள் கல்வியிலே கவனம் செலுத்துங்கள் உடல் நலத்திலும் கவனம் செலுத்தி தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்து நல்ல உடல் வளத்தோடு தெளிவான அறிவோடும் சிந்தனையோடும் நல்ல நண்பர்களை கொண்டவர்களாகவும் நீங்களும் நல்ல நண்பர்களாகவும் பெற்றோருக்கு நல்ல பிள்ளைகளாகவும் ஆசிரியரகளுக்கு நல்ல மாணவர்களாகவும் நாட்டிற்கு நல்ல குடிமகனாகவும் வளர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கரங்களை வலுப்படுத்துகின்ற வகையிலே நீங்கள் செயல்படுங்கள் என்று உங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் நாகராஜ் பகுதி செயலாளர் என்.எஸ்.மோகன் தொகுதி செயலாளர் கே. மனோகர், சுகாதார குழு நிலைக்குழு தலைவர் ஏ. பழனி, கந்தன், என்.கே. வச்சலா, பாஸ்கரன், எம்.எம்.பாபு, சைதை ஜி.சாரதி, வட்ட கழகச் செயலாளர்கள் மு. சேதுராஜன், ஏ.வி.கே.ராஜ், அரி ஜெயபால் ஈகை சீனு, என்.எஸ். குட்டி, எஸ். வீரமணி, ஏ. பாஸ்கர் மற்றும் ஆசிரியர் பெருமக்களும் திரளான கழகத்தினரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்