முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய முதலீடு பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, டிச.3 - சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பது தொடர்பான பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தார். சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் பாராளுமன்றம் நேற்று 9-வது நாளாக முடக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, டெல்லியில் நடந்த இந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இந்த பிரச்சினைக்கு  எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும் இதன் மூலம் இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அரசு நம்புவதாகவும் அவர் கூறினார்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை  அனுமதிப்பது நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்கும். மேலும் விவசாயிகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நல்ல பலன்கள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.

மேலும் அறுவடைக்கு பிந்தைய நஷ்டத்தை தவிர்க்கவும் இது உதவும் என்றும் இந்த முடிவுக்கு  எதிர்ப்பு தெரிவிப்போரை சமாதானப்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்த அரசால் முடியும் என்றும் அவர் கூறினார்.

மாற்றங்கள் என்பது எளிதான காரியமல்ல. ஆனால் அந்த மாற்றங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்றும் அவர் கூறினார். வளர்ச்சியின் பாதையில் சவால்களை சந்திக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பணவீக்கம் என்பது நாட்டை பற்றிக்கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு  அன்னிய நேரடி முதலீடுகள் சிறப்பாக குவிந்து வருகின்றன என்றும் அவர் கூறினார். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிதமான அளவில் 7.5 சதவீதமாகத்தான் இருக்கும் என்றும் முகர்ஜி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago