முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிதி நிறுவனம் நடத்தி மோசடி: சகோதரர்கள் சிறையிலடைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.4 - ராஜபாளையத்தைப் வீகமாகக் கொண்ட இஸ்மாயில்கான் கோரி என்பவரது மகன்கள் அம்ஜத்கான்கோரி (35) மற்றும் அஸ்மத்கான் கோரி (36) ஆகிய இருவரும் பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள். இவர்கள் இருவரும் மதுரையில் சிறுதொழில்கள் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளனர்.  அதன்பிறகு. தங்களுடன் சிறுவயதில் பள்ளியில் படித்த நாகர்கோவிலைச் சேர்ந்த உறப்சிகா மொலின் க்ஷோபி (33) என்ற பெண்ணுடன் சேர்ந்து மோசடி செய்யும் எண்ணத்துடன், மதுரை எல்லிஸ் நகரில் கடந்த 2009 ஆம் ஆண்டு கின் லைப் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நடத்தி வந்துள்ளனர்.  அவர்கள் தங்கள் நிதி நிறுவனத்தின் முலம் பல்வேறு விதமான கவர்ச்சிகரமானத் திட்டங்களை அறிவித்து, அதன்மூலமாக அதிக வட்டி தருவதாக பொதுமக்களை நம்ப வைத்து, ஆசை காட்டி அவர்கள் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்த பணத்தினை தங்களின் நிதிநிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்துள்ளனர்.

மேற்கண்ட நிதிநிறுவனம் மூலமாக மிகக்குறுகிய காலத்திற்குள் அவர்கள் பல கோடி ரூபாயை பொதுமக்களிடமிருந்து வசூலித்து மோசடி செய்துள்ளனர். மேலும் 2010-ல் தகள் அலுவலகங்களை கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலியிலும் துவக்கி அங்கும் பொதுமக்களிடம் பலகோடி ருபாய் மோசடி செய்துள்ளனர்.  மேற்கண்ட நிதி நிறுவனத்தின் கவர்ச்சிகர திட்டங்களில் மயங்கியிருந்த பொதுமக்கள் ஆரம்பத்தில் இதுசம்பந்தமாக புகார்கள் ஏதும் கொடுக்கவில்லை.  இதனைப் பயன்படுத்திக் கொண்ட மேற்கண்ட மோசடிக் கும்பல் தங்கள் நிதிநிறுவனத்தின் மதுரை அலுவலகம் முலமாக ரு.10.02 கோடிகளும். கோயம்புத்தூர் அலுவலகம் முலமாக ரு.2 கோடிகளும் மற்றும் திருநெல்வேலி அலுவலகம் முலமாக ரு.49 லட்சகளும் வசூல் செய்து திடீரென தகள் அனைத்து அலுவலகங்களையும் முடிவிட்டு தலைமறைவாகிவிட்டனார். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலீட்டாளர்கள்  முடப்பட்ட நிதிநிறுவனங்களின் அலுவலகங்களை முற்றுகையிட்டனர்.  இதுசம்பந்தமாக கோயம்புத்தூர் நகர மத்திய குற்றப் பிரிவு மற்றும் பணச்சுழற்சி தடுப்புச் சட்டம் 1978 தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்புச் சட்டம் 1997-ன்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதேபோன்று மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவுதமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்புச் சட்டம் 1997-ன்படி மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு. வழக்கில் சம்பந்தப்பட்ட சகோதரர்கள் இருவரும் மதுரை. பொருளாதாரக் குற்றப் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் கோபால்சாமி மற்றும் அவரது குழுவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.  

மேற்கண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சகோதரர்களான அம்ஜத்கான்கோரி மற்றும் அஸ்மத்கான் கோரி ஆகிய இருவரும் தொடர்ந்து இதேபோன்ற குற்றங்களை செய்து பொதுமக்களை ஏமாற்றி வந்ததால் சென்னை. பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறைக் கூடுதல் இயக்குநர் ராஜா, காவல்துறைத் தலைவர் அலெக்ஸாண்டர்  மோகன், மற்றும் காவல் கண்காணிப்பாளர்   வெண்மதி ஆகியோரின் உத்திரவின்போல் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் தடுப்புக் காவலில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் இருவரும் மதுரை மத்திய சிறையில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் அவர்கள் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் பொதுமக்கள் தாங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை இப்படிப்பட்ட மோசடி நிதிநிறுவனங்களில் முதலீடு செய்யுமுன் கவனமுடன் சிந்தித்து முதலீடு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்