முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பானி சகோதரர்கள் மீண்டும் இணைகின்றனர்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச.4 - பிரிந்திருந்த அம்பானி சகோதரர்கள் மீண்டும் இணைகின்றனர். தங்களுடைய தொழில் மற்றும் வர்த்தகத்தை பெருக்க முடிவு செய்துள்ளனர். இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான திருபாய் அம்பானியின் மகன்கள் முகேஷ் அம்பானி மற்றும் அனில் அம்பானி ஆகியோர்களிடையே தொழில் பிரிவினை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2006 ம் ஆண்டில் ரூ. 3,82,500 ஆக இருந்த இவர்களின் சொத்து மதிப்பு பிரிவினை காரணமாக ரூ. 1,42,500 கோடியாக குறைந்து விட்டது. இந்நிலையில் முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் மீண்டும் இணைய முடிவு செய்துள்ளனர். 

தாயார் கோகிலாவின் கோரிக்கையை ஏற்று சகோதரர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இதன் முதல் நடவடிக்கையாக முகேஷ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனத்திடம் தொலைத் தொடர்பு கோபுர வசதி உள்ளது. இந்த கோபுரத்தை முகேஷ் அம்பானியின் ஆர்.ஐ.எஸ். நிறுவனத்திற்கு குத்தகைக்கு தர முடிவு செய்துள்ளனர். 

தற்போது அம்பானி சகோதரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,42,500 கோடியாக உள்ளது. இதில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 1,13,000 கோடி என்றும் அனில் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 29.500 கோடி என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்