முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

விசாகப்பட்டினம், டிச. 4 - மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நடை பெற்ற 2 -வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 2- 0 என்ற கணக்கில் அசைக்க முடியாத முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் விராட் கோக்லி சதம் அடித்தார். அவருடன் இணைந்து ஆடிய ரோகித் சர்மாவும் அபாரமாக பேட்டிங் செய்து சதத் தை நெருங்கினார். இதனால் இந்திய அணி அமோகமான வெற்றியை ப் பெற்றது. 

முன்னதாக பெளலிங்கின் போது, இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். மே.இ.தீவு அணி சார்பில் துவக்க வீரர் சிம்மன்ஸ், கடைசி வீரர் ராம்பால் மற்றும் பொல்லார்டு ஆகிய மூவர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

இந்தியா மற்றும் மே.இ.தீவு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவு அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்னை எடுத்தது. 

மே.இ.தீவு அணி தரப்பில், சிம்மன்ஸ் 78 ரன்னை எடுத்தார். கடைசி வீரரான ராம்பால் அதிரடியாக ஆடி 66 பந்தில் 86 ரன்னை எடுத்தார். தவிர, பொல்லார்டு 35 ரன் எடுத்தார். உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும், வினய் குமார் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்திய அணி 270 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்பு களம் இறங்கிய இந்திய அணி 48.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்னை எடுத்து வெற்றி பெற்றது. 

இந்திய அணி தரப்பில் விராட் கோக்லி 123 பந்தில் 117 ரன்னை எடுத் தார். இதில் 14 பவுண்டரி அடக்கம். ரோகித் சர்மா 98 பந்தில் 90 ரன் னை எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். கேப்டன் சேவாக் 26 ரன் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோக்லி தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்