முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண்மையில் தமிழகம் முதல் மாநிலமாக மாறும்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கோவை, டிச.4 - அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டகிளை நீர்உந்து நிலைய அடிக்கல் நாட்டு விழா, சேர்வைக்காரன்பாளையத்தில் நேற்று  பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் என்.கே. முத்துக்கருப்பண்ணசாமி தலைமையில் நடைபெற்றுது. இவ்விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன் கலந்து கொண்டு ரூ.12.05 லட்சம் மதிப்பிலான அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்ட கிளை நீர்உந்து நிலையத்திற்கு அடிக்கல்நாட்டி, பூமிபூஜையில் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் செ.தாமோதரன் பேசியதாவது: 2001-2005 ஆம் ஆண்டில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தபகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.54 கோடி மதிப்பில் அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, கிணத்துக்கடவு தொகுதி மட்டுமின்றி பக்கத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டது. குடிநீர் ஒருசில இடங்களில் சரிவர வழங்கப்படாமல் உள்ளதை சரிசெய்யும் வகையில், சேர்வைக்காரன்பாளையம் ஊராட்சியில் ரூ.12 லட்சம் மதிப்பில் கிளை நீர்உந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்நீர் ஊந்து நிலையத்தின் மூலம் இந்த ஊராட்சிகளுக்கு 8.000 மக்கள் பயன்பெற உள்ளனர். குடிநீர் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படும். குடிநீர் பிரச்சனை மட்டுமின்றி தேர்தலில் வாக்குறுதிகள் அனைத்தும் 1 1/2 ாலத்தில் தீர்த்து வைக்கப்படும். மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் தாமதமின்றி அனைத்து பகுதியிலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஏழை, எளிய மக்களின் மீது மிகுந்த அன்புகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியது போல புரட்சித்தலைவி அம்மா ஏழை, எளிய மக்களின் மீது மிகுந்த அன்பு கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.

முந்தைய ஆட்சியாளர்கள் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கடன் வைத்து சென்றதால்தான் பால், பஸ்கட்டணங்களை அம்மா அவர்கள் சிறிது உயத்தி உள்ளார்கள். விலை உயர்வு வருங்காலத்தில் உங்களின் உயர்வுக்காக பல்வேறு திட்டங்களின் மூலம் வழிவகுக்கும். இன்னும் ஒரு ஆண்டில் மின் பற்றாக்குறையில்லாத மாநிலமாக தமிழகம் திகழும். முந்தைய ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டபோதும், அதன் பலன்கள் விவசாயிகளுக்கு கிடைக்காமல் போனது, நான் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தின்போது தெரியவந்துள்ளது. விவசாயிகளுக்கு தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு அனைத்தும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏழை, எளிய 52 லட்சம் குடும்பங்களுக்கு தினசரி 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட அம்மா உத்தரவிட்டுள்ளார்கள். முதலமைச்சர் அம்மா அவர்கள் வேளாண்மைத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார்கள். இதன் மூலம் வேளாண்மையில் தமிழகம் முதல் மாநிலகமாக மாறும். இந்த கிளை நீர்உந்து நிலையம் கட்ட நன்கொடையாக இடம் வழங்கிட கோவிந்தனூர் எம்.மகாலிங்கம் அவர்களை பாராட்டுகிறேன். இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி (வடக்கு) ஒன்றியக்குழு தலைவர் செல்விபத்மினி தனபால், ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.வி. மோகன்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மனோன்மணி கதிர்வேலு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆர்.ராதாமணி, ஒன்றிய குழு துணைத்தலைவர் ரத்னகுமார் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நிர்வாகப் பொறியாளர் வி.கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் எஸ்.லோகநாதன், நிஷார் அகமது, உதவி பொறியாளர் கே.செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பா. அல்லாபிச்சை, வி.குருராகவேந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர் ஆர்.முத்துராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்