முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விரைவில் அணிக்கு திரும்புவேன்: இர்பான் பதான்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, டிச. 4 - விரைவில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பேன் என்று ஆல் ரவுண்டர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்தார். இது பற்றிய விப ரம் வருமாறு -  இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக வலம் வந்த இர்பான் பதான் சில ஆண்டுகளாக சரியாக விளையாடவில்லை. எனவே அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந்த நிலையில் சமீப காலமாக அவர் மீண்டும் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது நடந்து வரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி யில் அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். இதில் அவர் 10 விக்கெட்டைக் கைப்பற்றி உள்ளார். 

எனவே அவர் மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதி ர்பார்க்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது - நான் இப்போது நல் ல பார்மில் இருப்பதாக கருதுகிறேன். 

கடந்த 3 போட்டிகளில் நன்றாக விளையாடி இருக்கிறேன். எனது பழைய ஆட்டம் மீண்டும் வந்து விட்டது. நான் 2003 -ம் ஆண்டு 19 வய தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டேன். 

நான் இப்போது போட்டிக்கு தகுதி நிலையை அடைந்திருப்பதாக கரு துகிறேன். எனவே மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவே ன் என்ற நம்பிக்கை உள்ளது. 

எனது பந்து வீச்சு நான் நினைத்தது போல நன்றாக இருக்கிறது. கடு மையாக உழைத்து இதை எட்டி இருக்கிறேன். எனக்கு பயிற்சி அளித்த சேகர் மிகவும் உதவியாக இருந்தார். அவரால் தான் இந்த நிலையை எட்டி இருக்கிறேன். 

ஆனாலும் என்னை தேர்வு செய்வது தேர்வாளர்கள் கையில் உள்ளது. நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறே ன். அடுத்து நடக்கும் பரோடா போட்டியில் இதை விட சிறப்பாக செ யல்பட முயற்சிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். 

இந்திய அணியில் வேகப் பந்து வீச்சாளர்களால் நீண்ட காலம் இடம் பிடிக்க முடியவில்லை. ஜாஹிர்கான் ஒருவர் மட்டுமே தாக்குப் பிடித் து வருகிறார். ஆஷிஸ் நெக்ரா, அகார்கர் போன்ற வீரர்களால் மீண்டு ம் அணியில் இடம் பெற முடியவில்லை. 

அணியில் இடம் பிடிக்கும் இளம் வீரர்கள் ஒரு சில தொடர்களில் பங் கேற்கிறார்கள். பின்பு காணாமல் போகிறார்கள். வேகப்பந்து வீச்சா ளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. எனவே பதானின் கனவு நிறைவேறுமா?

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்