முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபுலாபுரம் சுரங்க ஊழல்: சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

ஐதராபாத்,டிச.4 - ஒபுலாபுரம் சட்டவிரோத ஊழல் வழக்கில் ஒபுலாபுரம் சுரங்க கம்பெனி மீது ஐதராபாத் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. ஆந்திரா மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் ஏராளமான இருப்புத்தாது பொருட்கள் இருக்கின்றன. இதை ஏராளமான சட்டவிரோத கம்பெனிகள் கள்ளத்தனமாக வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் சம்பாத்தியம் செய்து வருகின்றன. கர்நாடக மாநிலத்தையொட்டி ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒபுலாபுரம் பகுதியில் இரும்புத்தாது ஏராளமாக பூமிக்கு அடியில் படிந்து உள்ளன. இதை ஒபுலாபுரம் சுரங்க கம்பெனி என்று ஒன்றை ஏற்படுத்தி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ரெட்டி சகோதரர்கள் வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்து சம்பாத்தியம் செய்ததாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து வி.வி.லட்சுமிநாராயணன் தலைமையில்  விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. நேற்று ஐதராபாத்தில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 

இந்த வழக்கில் பிரதான குற்றவாளிகளான ஜனார்த்தன ரெட்டி மற்றும் ஒபுலாபுரம் நிர்வாக இயக்குனர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. கோர்ட்டு விதித்த கெடு முடிவதற்குள் ஒரு நாள் முன்னே நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி எர்றா ஸ்ரீலட்சுமிக்கு கீழ் கோர்ட்டு ஏற்கனவே ஜாமீன் வழங்கியுள்ளது. ஜனார்த்தன ரெட்டி நடத்தி வரும் ஒபுலாபுரம் சுரங்க கம்பெனிக்கு தாதுப்பொருட்கள் வெட்டி எடுக்க எர்றா ஸ்ரீலட்சுமிதான் அனுமதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்