முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆநதிராவில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 4 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

ஐதராபாத், டிச.4 - ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆந்திர சட்டசபையில் சபாநாயகர் அனுமதி அளித்துள்ளார். ஆநதிராவில் முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதற்கு பிறகு அம்மாநில அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இவரது மறைவுக்கு பிறகு முதல்வர் பதவியை தனக்கே தர வேண்டும் என்று இவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தி வந்தார். ஆனால் அந்த முதல்வர் பதவி ரோசைய்யாவுக்கு வழங்கப்பட்டது.  ரோசையாவின் ஆட்சிக்காலத்தில் தனி தெலுங்கானா மாநில பிரச்சினை மிகப்பெரிய விசுவரூபம் எடுத்தது. அந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவாக பல காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெகன்மோகன் ரெட்டி நீக்கப்பட்டார்.

ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக கணிசமான எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டு வந்த நிலையில் முதல்வர் ரோசையாவிடம் இருந்த முதல்வர் பதவியை கிரண் குமார் ரெட்டிக்கு காங்கிரஸ் மேலிடம் வழங்கியது.

தற்போது கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

கடந்த 1 ம் தேதி கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை அனுமதிக்கும்படி கோரி ஆந்திர சட்டசபையில் கடந்த 2 நாட்களாக கடுமையான அமளி ஏற்பட்டது.

இந்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நேற்று சட்டசபையில் சபாநாயகர் அனுமதி  வழங்கினார். ஒரு வரி கொண்ட இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வருகிற திங்கள் கிழமை விவாதம் நடத்தப்பட்டு பிறகு வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று தெரிகிறது.

ஆந்திர சட்டசபையின் மொத்தம் உள்ள 294  இடங்களில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கு மொத்தம் 76 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்