முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ டாங்கியில் பயணம் செய்தார் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல்

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

பர்ன், டிச.- 6 - இந்திய ராணுவத்தின் டி. 90 ராணுவ டாங்கியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டில்  பயணம் செய்தார். இந்த டாங்கியில் பயணித்த நாட்டின் முதல் ஜனாதிபதி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ம் ஆண்டு புனே அருகே லோஹேகாவூன் என்ற இடத்தில் உள்ள இந்திய விமானப்படை  விமான தளத்தில் இந்திய ராணுவத்தின் போர் விமானமான  சுகோய் - 30எம்.கே. ஐ. என்ற போர் விமானத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பயணம் செய்தார். அதன் பிறகு இப்போது ராஜஸ்தான் மாநிலம்  பர்ன் என்ற இடத்தில் போர் முனை பகுதியில்  இந்திய ராணுவத்தின் போர் டாங்கியான டி. 90 டாங்கியில் பயணித்து இரண்டாவது முறையாக ஒரு ராணுவ வாகனத்தில் பயணித்த பெருமை சேர்த்துள்ளார். ராஜஸ்தான் பாலை வனப்பகுதியில் 50, 000 இந்திய துருப்புக்கள் உள்ளனர். இங்கு 300 ராணுவ டாங்கிகள் உள்ளன. மேலும் காலாட் படையின் 250 பீரங்கிகளும் இந்த பகுதியில் உள்ளன. இந்த பகுதியில் ராணுவ வாகனங்களின் செயல்பாடுகள் குறித்த ஒத்திகை பர்ன் பகுதியில் நடைபெற்றது. அப்போது டி.90 டாங்கியில் அந்த டாங்கியில் இருக்கும் போர் வீரர்களை போன்ற கறுப்பு போர்க்கவசத்தை அணிந்து இந்த டாங்கியில் பிரதீபா பாட்டீல் பயணித்தார். இந்த டி. 90 டாங்கியில் பயணித்த நாட்டின் முதல் ஜனாதிபதி இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் இதே டாங்கியில்  ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங்கும் பயணித்தார். ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியும் வேறு  ஒரு டாங்கியில் ஏறி பயணித்தார். இந்த ஒத்திகை நிகழ்ச்சியின் போது  சுகாய் - 30, ஜாகுவார், மிக்- 27, மிக் -21, உள்ளிட்ட போர் விமானங்களும் ராணுவ ஹெலிகாப்டர்களும்  பங்கேற்றன. இநதிய ராணுவத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஒரு அதி நவீன ராடார் கருவியும் இந்த நிகழ்ச்சியின் போது சோதித்து பார்க்கப்பட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்