முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.வ. இடைத் தேர்தல்: திரிணாமுல் காங். அமோக வெற்றி

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, டிச. - 6 - மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா தெற்கு மக்களவை இடைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.  திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பாக்ஸி, 5 லட்சத்து 16 ஆயிரத்து 771 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் வித்தோபிரதோ பானர்ஜி, 2 லட்சத்து 86 ஆயிரத்து 662 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 2 லட்சத்து 30 ஆயிரத்து 99. இதன் மூலம் இத்தொகுதியில் அதிக வித்தியாசம் பெற்று சாதனை படைத்துள்ளது திரிணாமுல். காங்கிரஸ் கட்சி இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இதற்கு முன்னதாக மம்தா பானர்ஜி இத்தொகுதியில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 81 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதே அதிக வாக்கு வித்தியாசமாக இருந்தது. மேற்கு வங்க முதல்வர் பதவியை ஏற்க எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதால் மம்தா பானர்ஜி இத்தொகுதியை ராஜினாமா செய்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்