முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங். எம்.பி.க்களுக்கு கட்சி கொறடா திடீர் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,டிச.- 6 - காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கட்சி கொறடா திடீரென்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் வரும் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கட்டாயம் சபைக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பமாகிவிட்டது. ஆனால் நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் பாராளுமன்றம் தொடங்கியதிலிருந்தே முடங்கிப்போய் இருக்கிறது. முட்டுக்கட்டையை போக்க காங்கிரஸ் எவ்வளவோ முயன்றது. ஆனால் அதன் கூட்டணி கட்சிகளைக்கூட சமாதானப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் பாராளுமன்ற கூட்டம் மீண்டும் நாளை கூடுகிறது. அதனையொட்டி நாளையும் நாளை மறுதினமும் சபையில் முக்கிய நிகழ்ச்சிகள் எடுத்துக்கொள்ளப்படலாம். அதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் கட்டாயம் பாராளுமன்றத்திற்கு வர வேண்டும் என்று கட்சி கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆனால் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு நிறுத்திவைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிவித்திருப்பதால் முட்டுக்கடை தீரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்