முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய முதலீட்டிற்கு எதிராக ஒன்றுபட்டு குரல்கொடுக்க ராம்தேவ் கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

பெங்களூர், டிச.- 7- சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு  எதிராக அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கோரிக்கை விடுத்துள்ளார். யோகா குரு பாபா ராம்தேவ் பெங்களூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க முன் வந்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். அதற்கு பதில் அளித்த ராம்தேவ் இந்த விஷயத்தில் அனைவரும் ஒன்றுபட்டு  போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்க முடிவு செய்திருப்பதன் மூலம்  ஆளும் காங்கிரஸ் கட்சி , வெளிநாடு கம்பெனிகளின் ஏஜென்டாக செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது. முன்பு கிழக்கு இந்திய கம்பெனிகள் இந்தியாவை சூழ்ந்தன. இப்போது  வால்மார்ட் போன்ற கம்பெனிகள் இந்தியாவில் ஆக்கிரமிப்பு செய்ய பார்க்கின்றன என்றும் அவர் கூறினார். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளிப்பதற்கு எதிராக நாடு முழுவதும் பேரியக்கம் ஒன்றை துவக்க தான் ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

வெளிநாடுகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் குறித்து கேட்டதற்கு கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதைத்தான் எல்லா அரசியல்வாதிகளும் கூறி வருகிறார்கள். இதே போல ஊழலை ஒழிக்க வேண்டும் என்றும்  அவர்கள் கோரி வருகிறார்கள். ஆனால் இந்த இரு விஷயங்களில்  எப்படி என்ன நடவடிக்கைகளை எடுப்பது என்பது குறித்து யாரும் பேசுவதில்லை என்றும் ராம்தேவ் கூறினார்.

என்னிடம் கூட விசாரணை நடத்த சி.பி. ஐ. மற்றும்  அமலாக்க துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் என்னிடம் ஒரு சிறு தவறை கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

வெளிநாட்டு வங்கிகளில் 700 இந்தியர்கள்  தங்களது கறுப்பு பணத்தை வைத்து இருக்கிறார்கள்.  ஆனால் இந்த பட்டியலை பகிரங்கமாக வெளியிட மத்திய அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என்பதுதான்  தனக்கு புரியவில்லை என்றும்  அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்