முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் அணு உலை வெடித்தது கதிர்வீச்சு: மக்கள் வெளியேற்றம்

சனிக்கிழமை, 12 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

டோக்கியோ,மார்ச்.- 13 - ஜப்பானில் பூகம்பம் மற்றும் சுனாமி பயங்கரமாக தாக்கியதில் சேதம் அடைந்த அணு உலைகளில் ஒன்று நேற்றுக்காலையில் வெடித்தது. அதிலிருந்து அணுக்கதிர்வீச்சு வெளியேறுகிறது. அதனால் அந்த அணு உலையை சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் பரபரப்பளவுக்கு மக்கள் வெளியேற்றப்பட்டுவிட்டனர். பூகம்பம் அடிக்கடி ஏற்படும் பகுதியில் ஜப்பான் இருக்கிறது. இங்கு அடிக்கடி பூகம்பம்,நிலநடுக்கும் ஏற்படும். சில நேரங்களில் பெரிய அளவில் பூகம்பம் ஏற்படும். கடந்த 125 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பானில் நேற்றுமுன்தினம் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. கடந்த 10 தேதி முதலில் நிலநடுக்கும் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தட்டுமுட்டு சாமான்கள் குலுங்கி ஆங்காங்கே கீழ கவிழ்ந்தன. இதனால் மக்கள் பயத்தால் தூங்கிக்கொண்டியிருந்தனர். 

அந்த நிலநடுக்கம் அதோடு போகாமல் நேற்றுமுன்தினம் பயங்கரமாக தாக்கியது. ரிக்டர் அளவில் 8.2 ஆக இருந்தது. இதனால ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. அதோடு மட்டுமல்லாது பயங்கரமாக சுனாமி வீசியது. இதனால் மேலும்  கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. கப்பல் உள்பட ஏராளமான கார்கள் சுனாமி அலையில் அடித்து செல்லப்பட்டன.  பூகம்பம் மற்றும் நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 600 ஐ தாண்டிவிட்டது. 

அதோடு மட்டுமல்லாது பூகம்பம் மற்றும் சுனாமியில் பாதிக்கப்பட்டுள்ள அணு உலைகளில் ஒன்று நேற்று பிற்பகல் சரியாக 1 மணிக்கு வெடித்து சிதறியது. இதிலிருந்து அணுக்கதிர்கள் வீசத்தொடங்கிவிட்டது. இது மிகவும் ஆபத்தானது. அதனால் அந்த அணு உலையை சுற்றிலும் வசித்த சுமார் 45 பேர் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஜப்பானின் வடக்குப்பகுதியில் புகுஷிமா அணு உலையானது மிகப்பெரியதாகும். இந்த அணு உலையானது தலைநகர் டோக்கியோவில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அணுக்கதிர் வீசியதில் 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அணு உலை முழுவதும் உருகத்தொடங்கிவிட்டது என்று ஜப்பான் நாட்டு அணு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அணு உலை வெடித்து சிதறுவதற்கு முன்பு அந்த நாட்டு பிரதமர் நவ்டோ கான் ஹெலிகாப்டர் மூலம் விமானம் மூலம் பார்வையிட்டார். அணுஉலை வெடித்ததில் உலை இருக்கும் முக்கிய கட்டிடம் மற்றும் வெளிச்சுவர்கள் வெடித்து சிதறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்