முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் ரூ.15 கோடி கறுப்பு பணம் சிக்கியது-பிரவீன் குமார்

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.- 13 - தமிழகத்தில் கடந்த 11 நாட்கள் நடந்த பறக்கும் படை வேட்டையில் ரூ.15 கோடி கறுப்பு பணம் சிக்கியுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார். இதுகுறித்து பிரவீன்குமார் கோட்டையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் யாராக இருந்தாலும் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியிருக்கும். சில கட்சிகள் விதியை மீறி விநியோகம் செய்த இலவச வேஷ்டி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திருக்கோயிலூர் ராதாபுரம் பஜாரில் ரூ.24 லட்சமும் 3 லட்சம் பீடி கட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் 4 கார்களில் இருந்த ரூ.3.5 கோடி பணமும் பிடிபட்டுள்ளது. திருப்பூரில் ரியல் ஸ்டேட்  தொழில் செய்யும் ஒருவர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 50 லட்சம் பிடிபட்டுள்ளது. இவரது மனைவி காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராக உள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்த பின்னர் கடந்த 11 நாட்களில் பறக்கும் படை நடத்திய சோதனையில் மொத்தம் ரூபாய் 15 கோடி வருமான வரித்துறையினர்களிடம் சிக்கியுள்ளது. 

தமிழ்நாட்டில் அமைக்கப்படும் 10 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் கேமிரா பொருத்தப்பட உள்ளது. இந்த கேமிராக்கள் மூலம் வாக்காளர்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை அறிய முடியாது. சிலர் இதுகுறித்து தவறான பிரசாரத்தில் ஈடுபடுவதாக புகார் வந்துள்ளது. எனவே பொதுமக்கள் கேமிரா அச்சமின்றி வாக்களிக்கலாம். வாக்குச்சாவடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவே கேமிரா பொருத்தப்பட உள்ளது. வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதை கேமிரா மூலம் அறிந்துகொள்ள முடியாது என்பதை தெளிவாக பொதுமக்கள் தெரிந்துகொண்டு எந்தவித அச்சமும் இன்றி தாங்கள் விரும்பிய கட்சிகளின் சின்னங்களுக்கு வாக்களிக்கலாம். கேமிரா குறித்து தவறாக பிரசாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்