முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணா மலையில் 2668 அடி உயர மலையில் தீபம்

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருவண்ணாமலை, டிச.9  - திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத்திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என முழக்கமிட்டு தீபத்தை தரிசித்தனர்.

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பிரசித்தி பெற்ற கார்த்திகை மகா தீபத்திருவிழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த 29ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று (8ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பிறகு அண்ணாமலையாருக்கும் அம்மனுக்கும் பால், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பிறகு அண்ணாமலையாருக்கு வைர கிரீடமும், தங்க கவசமும் அணிவிக்கப்பட்டது. உண்ணாமுலை அம்மனுக்கு தங்க காசம் அணிவிக்கப்பட்டது. 2 சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யபட்டிருந்தது. இறைவன் பஞ்சமூர்த்தியாக இருப்பதை குறிக்கும் வகையில் கருவறையில் பஞ்சமுக தீபம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அனேகனாக (பஞ்சமூர்த்தி) இறைவன் ஒருவனே என்பதை விளக்கும் வகையில் பஞ்சமுக தீபத்திலிருந்து பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தை கோவில் இளவரசு பட்டம் குமார் குருக்கள் ஏற்றினார். அப்போது பி.டி.ரமேஷ் குருககள் உள்பட பலர் அருகிலிருந்தனர். ராஜா குருக்கள் பரணி தீபத்தை பொதுமக்களின் தரிசனத்திற்காக எடுத்து வந்தார். அப்போது கோவிலுக்குள் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலைக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு தீபத்தை தரிசித்தனர். பரணி தீபம் ஒவ்வொரு சன்னதியாக எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தீபங்கள் ஏற்றப்பட்டன. அதன்பிறகு காலபைரவர் சன்னதியில் வைக்கப்பட்டது. இதையடுத்து அத்தீபம் பர்வத ராஜ குலத்தினரால் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பரணி தீபம் நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பரஞ்ஜோதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கோகுலஇந்திரா, செல்லூர் ராஜி, ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, நகரமன்ற தலைவர் என்.பாலசந்தர் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நேற்று பகல் மகாதீப நிகழ்ச்சிகள் துவங்கின. கோயிலுக்குள் உள்ள தீப தரிசனம் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், முருகர், அண்ணாமலை ​ உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக எடுதுது வந்து வைக்கப்பட்டன. மாலை 5.58 மணிக்கு அண்ணாமலையார் சன்னதிக்குள்ளிருந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே எடுத்து வரப்படும் அர்த்தநாரீஸ்வரர் வெளியே எடுத்து வரப்பட்டார். அப்போது பந்தங்கால் தீபம் ஏற்றப்பட்டு மலையை நோக்கி காட்டப்பட்டது. உடனே மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலை உச்சியில் தயாராக வைக்கப்பட்டிருந்த 6 அடி உயரம், 3 அடி அகலம் கொண்ட கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது திருவண்ணாமலை நகரை சுற்றி கூடியிருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட்டு தேங்காய் உடைத்து, கற்nullரம் ஏற்றி தீபத்தை வழிபட்டனர். தீபத்தை தரிசிக்க திருவண்ணாமலையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. மலையில் மகாதீபம் ஏற்றப்பட்டதும் திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள வீடுகளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். திருவண்ணாமலையே வண்ண விளக்குகளால் ஜொலித்தது. கோயிலுக்குள் தீபதரிசனம் முன்பு எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு nullஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். மகாதீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். இதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாதீபத்தை அருகில் சென்று தரிசிக்க மலையேறினர். அவர்களுக்கு கமாண்டோ படை போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி பக்தர்களின் பாதுகாப்பு பணிக்கு 12 ஆயிரம் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து நள்ளிரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதியை வலம் வந்தனர். கார்த்திகை தீபவிழா தொடர்ச்சியாக 3 நாள் தெப்பல் திருவிழா இன்று தொடங்குகிறது. அய்யங்குளத்தில் நடைபெறும் இவ்விழாவில் இன்று இரவு சந்திரசேகரரும், நாளை இரவு பராசக்தி அம்மனும், நாளை மறுநாள் சுப்பிரமணியரும் தெப்பத்தில் சுற்றிவந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தீபத்திருவிழாவைக் காண வருகை தந்த பக்தர்களுக்கு என்றுமே இல்லாத அளவு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, நகரமன்ற தலைவர் என். பாலசந்தர் ஆகியோர் மேற்பார்வையில் ரூ. 1.5 கோடியில் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து தரப்பட்டிருந்தன

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்