முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைப் பெரியாறு பேச்சுவார்த்தை: பங்கேற்க கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.9 - முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக கேரளம் மற்றும் தமிழக எல்லை மாவட்டங்களில் பதட்டம் உருவாகி இருப்பது கவலையளிக்கிறது. இந்த பிரச்சினை சுப்ரீம் கோர்ட் விசாரணையில் உள்ளது. இதற்காக முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அணை பாதுகாப்பு குறித்து இந்த குழு ஆய்வு செய்து வருகிறது. கடந்த 5 ம் தேதி நடைபெற்ற இக்குழுவின் கூட்டம் மீண்டும் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ளது. இந்த ஆய்வு பணிகளை துரிதப்படுத்தி விரைவில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்க வேண்டும். 

இந்நிலையில் அணையின் பாதுகாப்பு நீர் மட்டத்தை குறைப்பது போன்ற பிரச்சினைகளை எழுப்பி கேரளத்தில் போராட்டங்களை நடத்துவது சரியானதல்ல. பாரம்பரிய சகோதர உறவு கொண்ட கேரள, தமிழக மக்கள் மத்தியில் இப்பிரச்சினை மையப்படுத்தி மோதலை உருவாக்க சில சுயநல சக்திகள் செயல்படுவது குறித்து இரு மாநில மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இரு மாநிலங்களிலும் வன்முறைக்கு இடம் தராமல் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும். பிரச்சினைக்குரிய முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்பு படையை அனுப்புவதுடன் பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மத்திய அரசும் இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் பதட்டத்தை தவிர்க்கவும், சுமூக நிலையை ஏற்படுத்தவும் இரண்டு மாநில அரசுகளையும் அழைத்து மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். அவ்வாறு நடைபெறும் பேச்சுவார்த்தையில் தமிழக அரசு கலந்து கொள்ள வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago