முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைத் தமிழர் 12660 குழந்தைகள் விடுதிகளில் தங்கிபடிக்க அனுமதி-ஜெயலலிதா

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, டிச.- 10 - தமிழகத்தல் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத்தமிழர்களுக்கும் நீட்டிக்கப்பட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி அவர்களின் 12660 குழந்தைகளும் அரசின் மாணவர் விடுதிகளில் தங்கிப்படிக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-  இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வந்து, இங்கு முகாம்களில் தங்கியிருக்கும்  தமிழர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா, தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அனைத்து நலத் திட்டங்களும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீnullட்டிக்கப்பட  உத்தரவிட்டுள்ளார்.  இதன் அடிப்படையில் பல்வேறு நலத் திட்டங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கல்வி பயிலும் 21,000 முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வர சிரமப்படுவதை அறிந்த  தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை / பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, ஆகிய துறைகளால்  நிர்வகிக்கப்பட்டு வரும் அனைத்து மாணவர், மாணவியர் விடுதிகளிலும்,   அவர்கள் தங்கி  கல்வி பயில உத்தரவிட்டுள்ளார்.  இதன்படி, தமிழகத்தில் தற்போது இயங்கி வரும்  1,294 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர் / மாணவியர்களுக்கான விடுதிகளில், ஒவ்வொரு விடுதியிலும்  தற்போது அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கு கூடுதலாக 5 இடங்கள் வீதம் மொத்தம் 6,470 கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 3 கோடியே 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் தொடரும் செலவினம் ஏற்படும். இதேபோன்று, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 1238 விடுதிகளில், ஒவ்வொரு விடுதியிலும் தற்போது அனுமதித்துள்ள எண்ணிக்கைக்கு கூடுதலாக 5 இடங்கள் வீதம் மொத்தம் 6,190 இடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 4 கோடியே 25 லட்சத்து 64 ஆயிரத்து 620 ரூபாய் தொடர் செலவினம் ஏற்படும்.  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின்  இந்த நடவடிக்கைகள் மூலம், அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களின் 12,660 குழந்தைகள்  ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.   இது தவிர,  இலங்கைத் தமிழர்கள் தங்கள் படிப்பினை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படிப்பதினால், அவர்களின் வருங்கால வாழ்விலும்  வளம் ஏற்படும்.
இவ்வாறு தமிழக அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்