முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிளை வழங்கி செல்லூர் ராஜூ பேச்சு

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,டிச.- 10 - தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக்குவதற்காக பல்வேறு புதிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார் என்று மதுரையில் இலவச சைக்கிள்களை வழங்கி அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.மதுரை ஜெய்கிந்துபுரத்தில் உள்ள டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சகாயம் தலைமை வகித்தார். விழாவில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசியதாவது, அனைத்து மக்களாலும் பாராட்டப்படுகின்ற கருணை உள்ளம் கொண்ட தமிழக முதலமைச்சரின் நலத்திட்டங்களில் ஒன்றான இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஒருகாலத்தில் கிராமத்தில் வாழும் ஏழை மளிய மாணவர்கள் அன்றாட உணவிற்கே சிரமப்படும் நிலைமையில் மிகவும் வறுமையில் வாடிக்கொண்டிருந்த பொழுது முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தினை துவக்கி வைத்தார். இன்றுவரை அந்த திட்டம் சாகாவரம் பெற்ற திட்டமாக மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதுபோல தமிழக முதலமைச்சர் இந்தத இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். இந்த திட்டம் மாணவ,மாணவியரிடையே ஒரு உற்சாகத்தையும், உந்து சக்தியையும் ஏற்படுத்தி உள்ளது. அதேப்போலவே இன்றைய மாணவ,மாணவிகள் உலக அறிவு பெற வேண்டுமென்ற தொலை நோக்கு பார்வையுடன் தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கள் உன்னதமான சிறப்பு திட்டமான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதிகாலை எழுந்து உலகத்தில் வாழும் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக சுப்ட்சமாக வாழ வேண்டுமென்று இறைவனை வேண்டுகின்ற உலமாக்களுக்காகவும் தமிழக முதலமைச்சர் இந்த இலவசமிதிவண்டிகளை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் 371 உலமாக்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கப்பட உள்ளது. அதன் துவக்கமாக இன்று உலமாக்களுக்கு 29340 மதிப்பில் இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்று சொல்லுகிறவர்களுக்கு தமிழ்நாட்டை ஒரு முன்மாதிரி மாநிலமாக்க கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக மக்களுக்கு பல புதிய பயனுள்ள திட்டங்களை தமிழக முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.    நிகழ்ச்சியில் ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ, மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, எம்.முத்துராமலிங்கம் எம்எல்ஏ, தெற்கு மண்டல தலைவர் பெ.சாலைமுத்து, டிவிஎஸ் பள்ளிகளின் நிர்வாக இயக்குனர் ஆர்.சீனிவாசன், கவுன்சிலர்கள் பூமிபாலகன், கே.முருகேசன், ராஜசீனிவாசன், ஜெயலட்சுமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் பால சுந்தர்ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக முதன்மை கல்வி அலுவலர் சு.நாகராஜமுருகன் வரவேற்றார். முடிவில் மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் காமாட்சி கணேசன் நன்றி கூறினார்.
-----
புட்நோட்
------
மதுரை டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் தமிழக அரசின் இலவச சைக்கிள்களை மாணவிகளுக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார். உடன் கலெக்டர் சகாயம், ஏ.கே.போஸ் எம்எல்ஏ, மேயர் ராஜன்செல்லப்பா, எம்.முத்துராமலிங்கம் எம்எல்ஏ, தெற்கு மண்டல தலைவர் பெ.சாலைமுத்து, கவுன்சிலர்கள் பூமிபாலகன், கே.முருகேசன், சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.
----
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்