முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒஸ்தி படத்திற்கு தடைவிதிக்க கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

சனிக்கிழமை, 10 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. திருச்சியை சேர்ந்தவர் எஸ்.பி.ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நான் செல்வராணி பிக்சர்ஸ் என்ற படநிறுவனம் நடத்தி வருகிறேன். கடந்த 1999 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் தயாரித்த மோனிஷா என் மோனோலிசா என்ற படத்திற்காக  ரூ.34 லட்சம் கடன் உதவி செய்தேன். டி.ராஜேந்திரனின் சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிட்டது. இந்த படத்தை 5 ஆண்டுகளுக்கு குறைந்தப்பட்ச உத்தரவாதம் அடிப்படையில் வெளியிடும் உரிமையை சிம்பு சினி ஆர்ட்ஸ் எனக்கு வழங்கியது. ஆனால் சிம்பு சினி ஆர்ட்ஸ் எனக்கு கடன் பாக்கிவைத்துள்ளது. இதுவரை அந்த கடனை தரவில்லை. இந்நிலையில் பாலாஜி விசுவல் வென்சர் என்ற படநிறுவனம் ஒஸ்தி என்ற படத்தை தயாரித்துள்ளது. நடிகர் சிம்பு நடித்து இயக்குனர் தரணி டைரக்டர் செய்துள்ளார். இந்த படத்தை வெளியிடும் உரிமையை குறள் டிவி பெற்றுள்ளது. ஆனால் குறள் டிவி உரிமையாளரும், சிம்பு சினி ஆர்ட்ஸ் உரிமையாளரும் ஒருவரே. ஆகவே சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் எனக்கு தரவேண்டிய பணபாக்கியை தரும்வரை படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.கே.சர்மா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது குறள் டி.வி. சார்பில் வழக்கறிஞர் சண்முகம் ஆஜராகி, சிம்பு சினி ஆர்ட்ஸ் மற்றும் குறள் டிவி ஒன்றுக்கு ஒன்று சம்மந்தமில்லாதது. இருநிறுவனத்திற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. மனுதாரர் (படநிறுவனர், ராமமூர்த்தி) மோனிஷா என் மோனோலிசா, படம் வெளிவரும் போது தடைகோரி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் அப்பொழுதே தள்ளுபடி செய்தது. இவரது வாதத்தை ஏற்று கொண்ட நீதிபதி, ராமமூர்த்தி மனுவை தள்ளுபடி செய்த உத்தரவிட்டார். இதற்கிடையில் சாலிகிராமத்தை சேர்ந்த பிரவின்குமார் என்பவர் ஒஸ்தி படத்திற்கு தடைவிதிக்க கேட்டு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். சினிமா சூட்டிங்கில் வாடகைக்கு வாகனங்கள் சப்ளை செய்து வருகிறேன். நடிகர் சிம்பு நடித்த ஒஸ்தி படத்திற்கும் வாகனங்களை வாடகைக்கு என்னிடத்தில் எடுத்தார்கள். அதற்கான வாடகை பணம் 8 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணபாக்கி உள்ளது. என்னுடைய பணத்தை திருப்பி செலுத்தும்வரை படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார். இந்த மனுமீது விசாரணை  மிக விரைவில் வரும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago