முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்ல இலங்கை அகதிகளுக்கு அனுமதி இல்லை-தமிழக அரசு

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் மார் -13 - கச்சத்திவு திருவிழாவில் கலந்து கொள்ள இந்தியாவில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட கலெக்டர் கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து கச்சத்தீவில் நடைபெறும் புதிய அந்தோனியார் திருவிழாவில் செல்லுதல் தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் போது தெரிவித்ததாவது.  இந்தியத்தூதரகம் மற்றும் இலங்கை தூதரகம் அனுமதியுடன், ரமேஸ்வரத்திலிருந்து ரமேஸ்வரம் பங்குத்தந்தை மைக்கேல்ராஜ், தலைமையில் சுமார் 2500 பேர் 19.03.2011 அன்று செல்ல உள்ளனர்.

கச்சத்தீவிற்கு செல்லுவதற்கு பெரிய படகுகள் மட்டும் அனுமதிக்கப்படும். படகுகள் எண், அந்தப்படகின் தலைவர் யார், அவற்றில் எத்தனை பேர் செல்லுகிறார்கள் என்பதையும், படகில் செல்லக்கூடியவர்கள் போட்டோ ஒட்டிய அடையாள அட்டை மட்டும் அவர்களின் முகவரி போன்ற விபரங்கள் அடங்கிய பட்டியல் 3 நகல்கள் எடுத்து வருவாய்த்துறை, சுங்கத்துறை, கடலோர காவல் படை ஆகிய துறைகளிடண் பங்குத்தந்தை மைக்கேல் ராஜ், வழங்க வேண்டும் எனவும், படகுகளில் உணவு பொருட்கள், குடிதண்ணீர், முதலுதவி சாதனங்கள் போன்றவைகளை தவிர வியாபார பொருட்களோ, 

தடைசெய்யப்பட்ட பொருட்களோ கொண்டு செல்லக்கூடாது, பிலாஸ்டிக் பொருள் கொண்டு செல்வது, மதுபானம், பீடி, சிகரெட், எடுத்துசெல்லுதல் போன்றவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. படகுகளில் எதிர்பாராத விதமாக அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு லைப்  ஜாக்கெட் போன்றவைகள் கொண்டு செல்ல வேண்டும். புனித அந்தோனியார் விழாவிற்கு செல்லுபவர்கள் ராமேஸ்வரம் படகு கட்டும் துறையிலிருந்துதான். புறப்பட வேண்டும். கச்சத்தீவிலிருந்து வரும் பொழுது அந்து தான் செல்ல வேண்டும்.19.03.2011 அன்று காலை 4.30 மணிக்கு புறப்படுவார்கள் என்று கூறினார்.

இக்கூட்டத்தில் ராமநாதபுரம் சரக காவல் துணைதலைவர் அமல்ராஜ், காவல் துறைகண்காணிப்பாளர் அனில்குமார்கிரி, மாவசட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியன், ராமேஸ்வரம் கடலோர கடற்படை கமாண்டண்ட் சபரப் அகர்வால், மண்டபம் கடலோர கடற்படை வேணுமத்தையை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பொன்னையைா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ், மீனவ சங்கப்பிரதிநிதிகள் காவல் துறை வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்