முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் 16 ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மார்ச்.- 13 - வரும் சட்டப் பேரவை தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் வரும் 16 ம் தேதி தீர்ப்பு அளிக்க வாய்ப்புள்ளதாக அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தே.மு.தி.க. கடந்த 2006 ம் ஆண்டு நடந்த பேரவை தேர்தலில் முதன் முதலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க. வேட்பாளர்கள் அனைவரும் கணிசமான ஓட்டுக்களை பெற்று 3 வது இடத்தை பிடித்தனர். பதிவு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குத்தான் தேர்தலில் போட்டியிட பொது சின்னம் வழங்கப்படுவது வழக்கம். தே.மு.தி.க.வோ தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படாத கட்சியாக உள்ளது. 

கடந்த 2009 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தே.மு.தி.க.வுக்கு முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார் விஜயகாந்த். தே.மு.தி.க.வுக்கு தமிழகத்தில் 8 சதவீத வாக்கு உள்ளதால் தற்காலிகமாக முரசு சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 

இந்நிலையில் வரும் ஏப்ரல் 13 ம் தேதி தமிழக சட்டப் பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தங்களது கட்சிக்கு முரசு சின்னத்தை பெற்று விட வேண்டும் என்று தே.மு.தி.க. முனைப்புடன் உள்ளது. கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் 11 சதவீதமாக வாக்கு வங்கி உயர்ந்து நிலையை கருத்தில் கொண்டு முரசு சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக டெல்லி சென்ற அவர், முரசு சின்னம் ஒதுக்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். இந்த வழக்கு மீதான தீர்ப்பு இம்மாதம் 16 ம் தேதி வரும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்