முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள- மத்திய அரசை கண்டித்து மேலூரில் கடை அடைப்பு - போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மேலூர்,டிச.- 11 - முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து கேரள மற்றும் மத்திய அரசை கண்டித்து மேலூரில்  முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள, மத்திய அரசைக் கண்டித்து மதுரை மாவட்டம் மேலூரில் நேற்று ஒருநாள் மட்டும் கடைஅடைப்பு, வேலைநிறுத்தம் மற்றும் ஊர்வல ஆகியவை நடத்தப்பட்டன. இந்த ஒட்டுமொத்த போராட்டத்தினால் மேலூர் நகரமே  ஸ்தம்பித்தது. மேலூர் வர்த்தக பொது நலச்சங்கம் தலைமையில் நகைக்கடை, ஜவுளிக்கடை, வழக்கறிஞர்கள் சங்கங்கள் உட்பட அனைத்து சங்கங்களும் கடை அடைப்பில் கலந்து கொண்டன. மேலும் லாரி உரிமையாளர், டிரைவர் சங்கங்களும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்ததால் மேலூர் நகர் தெருக்கள் மற்றும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன.  பின்னர் மாலை 4 மணியளவில் ஊர்வலம் பொதுபணித்துறை அலுவலகம் முன்பிலிருந்து மேலூர் தாலுகா ஆபீஸ் வரை ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை பெரியார் பாசன திட்டக் குழுத்தலைவர் சீமான் (எ) மீனாட்சி சுந்தரம் துவக்கிவைத்தார்.  இந்த ஊர்வலத்தில் அனைத்து சங்கங்களும் மற்றும் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஊர்வலம் தாலுகா அலுவலகம் வந்தடைந்தது. அங்கிருந்த தாசில்தார் மோகனாவிடம் முல்லை பெரியாறு அணையை மீட்கக்கோரி மனு அளிக்கப்பட்டது. பின்னர் பொதுப்பணித்துறை சார்பாக முல்லை பெரியாறு அணை குறித்து சிறப்பு படம் ஓட்டி காண்பிக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜேந்திரன், கண்காணிப்பு குழு தலைவர் எஸ்.பி.கண்ணன், எழிலரசு, கலைமணி வழக்கறிஞர்களும்  பதினொட்டாங்குடி ஊராட்சி தலைவர் பொன்னுச்சாமி, கணேஷ் தியேட்டர் உரிமையாளர் முருகன் ஆகியோர் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்