முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்வெட்டு ஜனவரி 10ம் தேதிக்குள்நிவர்த்தி செய்யப்படும்-நத்தம்விஸ்வநாதன்

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை,டிச. - 11 - தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தற்காலிக கூடுதல் மின்வெட்டு ஜனவரி 10 ம் தேதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் நீடித்த வளர்ச்சிக்கு எரிசக்தி என்ற தலைப்பிலான மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் பேசியதாவது, தமிழக மின்சார வாரியத்தின் மொத்த நிறுவு திறன் 10,267 மெகா வாட். ஆனால் தற்போது 8,500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தி செய்ய முடிகிறது. இதனால் கிட்டத்தட்ட 3 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த பற்றாக்குறையை போக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருகிறது. காற்றாலை மூலம் கூடுதலாக 6,547 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இது ஸ்திரமற்ற நிலையில் உள்ளதாக இருக்கிறது. இதனால் நடைமுறையில் உள்ள மின்வெட்டை அளவை காட்டிலும் கூடுதலாக ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. பராமரிப்பு பணியால் தூத்துக்குடி, நெய்வேலி என மொத்தம் 416 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுதான் இந்த தற்காலிக மின்வெட்டுக்கு காரணம். இந்த மின் உற்பத்தி மீண்டும் ஜனவரியில் தொடங்கப்படவுள்ளது. எனவே ஜனவரி 10 ம் தேதிக்குள் தற்காலிக கூடுதல் மின்வெட்டு நிவர்த்தி செய்யப்படும். மத்திய அரசின் அனுமதி கிடைக்காததால்தான் மேட்டூரில் டிசம்பர் மாதம் துவங்கவிருந்த 600 மெகாவாட் திறன் கொண்ட உற்பத்தி தடைபட்டுள்ளது. இதற்கான முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் வரும் மார்ச் மாதத்தில் தமிழகத்துக்கு கூடுதலாக 600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். சென்னை, திருவள்ளூரில் தேசிய மின்கழகத்துடன் மின்சார வாரியம் இணைந்து தலா 500 மெகாவாட் வீதம் 3 அனல் மின் யூனிட்டுகள் அமைத்து 1,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் உற்பத்தி செய்யப்படும் 500 மெகாவாட் மின்சாரத்தில் 69 சதவீதம் தமிழகத்திற்கு கிடைக்கும். எனவே 2012 க்குள் தமிழக மின் பற்றாக்குறை முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். இது தவிர, சென்னை, செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் துவங்கப்படவுள்ள புதிய திட்டங்கள் அனைத்தும் 2015க்குள் உற்பத்தியை தொடங்கி விடும். இதன் மூலம் தமிழகம் மின் உற்பத்தியில் மிகை மாநிலமாக மாறி விடும் என்றார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்