முல்லைப்பெரியாறு பிரச்சினை: சிறப்பு சட்டமன்ற கூட்டம் 15-ந்தேதி கூடுகிறது-ஜெயலலிதா

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.- 12 - முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக்கொடுக்காது என்ற நிலையை வலியுறுத்துவதற்காக சிறப்பு சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் 15-ம் தேதி கூட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.  முல்லைப்பெரியாறு பிரச்சினை நாளுக்குநாள் விஸ்வரூபமெடுத்து வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதலில் 142 அடியாக உயர்த்திக் கொள்ளவும், பின்னர் அணையை வலுப்படுத்தும் பணியை தமிழகம் மேற்கொண்ட பின்னர் மத்திய நீர் ஆணையம் திருப்தியடைந்ததும் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளவும் உச்சநீதிமன்றம் கடந்த 2006-ம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால் கேரள அரசோ இந்த ஆணையை முடக்கும் வகையில் அப்போதிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்பிரச்சினையின் விளைவாக கேரள அரசின் 2006-ம் ஆண்டின் சட்டதிருத்தம் செல்லத்தக்கதா என்பது உட்பட சட்டம் மற்றும் அரசமைப்பு ரீதியான விஷயங்களை தவிர ஏணையவற்றை பரிசீலிக்க முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஆனந்த தலைமையில் அதிகாரம் படைத்த குழு ஒன்றை உச்சநீதிமன்றம் நிறுவியது. அந்த குழு தனது விசாரணையை ஏறக்குறைய முடித்துவிட்டு உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கையை தரக்கூடிய நிலையில் கேரள அரசு தன் பழைய நிலையான புதிய அணையை கட்டும் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்ததுடன் சமீபத்தில் அம்மாநில சட்டமன்றத்தில் அதற்கான தீர்மானத்தையும் கொண்டு வந்துள்ளது. அதோடு முல்லைப்பெரியாறு அணையின் பகுதி நிலநடுக்க பிராந்தியமாக இருப்பதாகவும், அதனால் அணைக்கு புதிய ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், அது இடிந்து விட்டால் பலரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உண்டு என்றும் வீணான வதந்திகளை கேரள அரசு பரப்பி வருகிறது. இதனால் அணையின் கேரள பகுதியில் மேலும் பதட்டம் ஏற்பட்டது. பலர் அதை இடிக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். இதையொட்டி முல்லைப்பெரியாறு அணையை பாதுகாக்க மத்திய படையை அப்பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். மேலும் சமீபத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழலில் கேரளம்- தமிழகம் நலன் கருதி எந்தஒரு பிரிவினை சக்திக்கும் இடம் தரக் கூடாது என்றும் முதல்வர் ஜெயலலிதா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

இதையொட்டி நேற்று முன்தினம் கூடலூர் பகுதியில் எல்லைச் சாவடிகளை கேரளா மூடியது. எல்லைச் சாவடி பகுதிகளுக்குள் தமிழகத்திலிருந்து பொதுமக்கள் நுழைந்தால் கண்டதும் சுடவும் கேரள போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதையும் மீறி பல்லாயிரக்கணக்கான மக்கள் கேரளாவிற்குள் நுழையும் நடவடிக்கையில் இறங்கினர். அவர்களை தேனி மாவட்ட ஆட்சியரும், போலீசாரும் சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பினர். முல்லைப்பெரியாறு பகுதியில் உள்ள பதற்றத்தால் கடந்த 7 நாட்களாக நின்றிருந்த வாகன போக்குவரத்தை சீர்படுத்தவும், போதிய போலீஸ் பந்தோபஸ்து அளிக்கவும் தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் நடவடிக்கை எடுத்துள்ளார்.கேரள மாநில அரசு இப்படி பீதியையும், பதற்றத்தையும் உருவாக்கும் நடவடிக்கைகளில் இறங்கினாலும் தமிழக தரப்பில் மிகவும் பொறுமை காத்ததுடன் கொந்தளித்துள்ள பொதுமக்களை சமாதானப்படுத்தி அமைதி காத்திடும் முயற்சியில் முதல்வர் ஜெயலலிதாவும், உயர் அதிகாரிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முல்லைப்பெரியாறு பிரச்சினையில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலையில் தமிழக உரிமைக்காக உள்ளனர் என்பதை எடுத்துக் காட்ட சிறப்பு சட்டமன்றத்தை முதல்வர் ஜெயலலிதா கூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முல்லைப் பெரியாறு பிரச்சனை தற்சமயம் உச்சநீnullதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீnullதிமன்றத்திற்குத் தேவையான முக்கிய தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான ரீதியான புள்ளிவிவரங்கள் கொடுத்து, நம் பக்கம் உள்ள நியாயத்தை உச்சnullநீதிமன்றத்தை ஒத்துக் கொள்ளச் செய்வதால் தான் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு நம்புகிறது.  அதன் விளைவாக, எப்பொழுதும் உணர்ச்சிகளைத் தவிர்த்து, நியாயமாக நடந்து கொள்ளும்படி நான் தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறேன்.  நான் உங்களில் ஒருத்தியாக உங்களின் உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கிறேன். நமது நாட்டிற்கும், எனது மக்களுக்கும் அமைதியும் வளமும் கிடைக்க வேண்டும் என்று  நான் உறுதியாக நம்புகிறேன். எனது அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களை இந்த பிரச்சனை குறித்து உணர்ச்சிவசப்படாமல் இருக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். நாம் வன்முறையிலும், வெறுப்பிலும் நம்பிக்கையற்றவர்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்துவோம். இம்மாநிலத்தில் ஒரு சில நபர்களுக்கு மட்டுமோ அல்லது யாருக்கேனும் பாதிப்பு இருந்தால், நானும் எனது  தலைமையிலான தமிழக அரசும் உடனடியாக உதவிக் கரம் நீnullட்டி நடவடிக்கை எடுப்பதில் முதலாவதாக இருப்போம். இப்பிரச்சனையில், எனக்கும் தமிழக மக்களுக்கும், கேரள அரசு மற்றும் கேரள மக்களின் மீது எந்தவித விரோதமும் இல்லை. கேரள மக்களுக்கும், எங்களுக்கும் எந்தவித சச்சரவும் இல்லை.  எனவே, அவர்களின் உடமைகளுக்கு சேதம் உண்டாக்குவதும் அல்லது அவர்களை துன்புறுத்துவதும், அதன்மூலம் நமக்கு நாமே பாதிப்பு ஏற்படுத்துவதும் இப்பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. இப்பிரச்சனையை விஞ்ஞான ரீதியாகவும், தர்க்கnullர்வமான முறையிலும் கையாள உங்களது அரசை அனுமதிக்க வேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன்.  இச்சூழ்நிலையில், இந்த பிரச்சனையை மேலும் சிக்கலாக்காமல் உடனே கலைந்து செல்லும்படி மாநில எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பிரச்சினையில் தமிழக மக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிலைநாட்டும் வகையில், 15.12.2011 அன்று காலை 11.00 மணிக்கு ஒரு சிறப்பு சட்டமன்றப் பேரவைக் கூட்டம் கூட்டப்படும்.  இந்தக் கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றது என்று தவறாக பரப்பப்படும் பீதியின் அடிப்படையில் தமிழ்நாடு தனக்குள்ள உரிமையை விட்டுக் கொடுக்காது என்ற தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: