முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் பணியில் 1800 ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள்

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை,மார்ச்.- 13 - தமிழக சட்டப் பேரவை தேர்தல் பாதுகாப்பு பணிக்கு ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படைவீரர்கள் 1800 பேர் வந்துள்ளதாக ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. ஜி.எம்.பி. ரெட்டி தெரிவித்தார். திருநெல்வேலியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது,  தேர்தல் பாதுகாப்பு பணிக்கென ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படையை சேர்ந்த 15 கம்பெனிகள் சென்னை வந்துள்ளன. ஒவ்வொரு கம்பெனியிலும் 120 வீரர்கள் இருப்பார்கள். சென்னை வந்துள்ள இவர்கள் அங்கு காவல் துறை தலைவரை சந்தித்தனர். இவர்கள் அந்த மாவட்ட எஸ்.பி.யை சந்தித்து உள்ளூர் போலீசாருடன் இணைந்து தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். 

கேரளத்தில் ஓடும் ரயிலில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 நாளில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் கண்காணிக்கப்படும். இந்த சம்பவத்தையடுத்து இரவில் பயணிகள் ரயிலிலும் ரயில்வே பாதுகாப்பு படையினரை பாதுகாப்பு பணியில் அமர்த்துவது கேரள மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அது மற்ற இடங்களிலும் விரிவு படுத்தப்படும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago