துப்புரவு தொடிலாளர்களுக்கு கம்பளி ஆடைகள் முத்துராமலிங்கம் வழங்கினார்

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருமமங்கலம், டிச.- 12 - திருமங்கலம் நகராட்சியில் பணியாற்றிடும் துப்புரவு தொழிலாளர்களுக்கு பனிக்காலத்து குளிரை சமாளித்திட உதவும் கம்பளி ஆடைகளை முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வழங்கினார். திருமங்கலம் நகரை தூய்மையானதாக மாற்றுவதற்கு புதிய முயற்சியாக இரவு நேர துப்புரவு பணிகளில் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பனிக்காலம் துவங்கிடுவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் திருமங்கலம் ஜவஹர் நகரைச் சேர்ந்த டி.என். அழகர்சாமி தலைமையிலான பொதுநல சேவகர்கள் நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு கம்பளி ஆடைகள் வழங்கிட ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஜவஹர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு பனிக்காலத்து குளிரை சமாளித்திட உதவும் கம்பளி ஆடைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அ.தமிழ்ச்செல்வம், நகர செயலாளர் விஜயன், நகர்மன்ற தலைவர் உமாவிஜயன், துணைத்தலைவர் சதீஸ்சண்முகம், மாணவரணி செயலாளர் சுரேஷ், நகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமார், ஆய்வாளர் சரத்பாபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புட்நோட்:
திருமங்கலம் நகராட்சி துப்புரவு தொழிலாளர்களுக்கு கம்பளி ஆடைகளை முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., வழங்கினார்.
 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: