முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லைபெரியாறு பிரச்சினை:வி.ஆர். கிருஷ்ணய்யருக்கு வைகோகடிதம்

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, டிச.- 12 - மனித உரிமை போராளியாகிய நீங்கள் முல்லைப்பெரியாறு பிரச்சினையில் இப்படி நடக்கலாமா என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:-நான் தங்கள் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் கொண்டு உள்ளேன். தாங்கள் அளித்துள்ள சிறந்த பல தீர்ப்புகளை மேடைகளில் மேற்கோள் காட்டி பேசி வருகின்றேன். இந்த டிசம்பர் 10-ம் நாள், 1948-ம் ஆண்டு மனித உரிமைகள் பிரகடனம் வெளியிடப்பட்ட, வரலாற்று சிறப்புக்கு உரிய நாள்.   நீங்கள் ஒரு மனித உரிமை போராளி. இனப்படுகொலைக்கு உள்ளாகி இருக்கின்ற ஈழத்தமிழர்களின்பால் தாங்கள் கொண்டுள்ள பரிவுக்காக தமிழர்களாகிய நாங்கள் நன்றிக்கடன் பட்டு உள்ளோம். 1968 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் லண்டன் நகரில் நடைபெற்ற ஈழத்தமிழர்கள் குறித்த கருத்தரங்கில் நான் தங்களுடன் பங்கேற்றேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று 1996-ம் ஆண்டு 15-ம் நாள் சென்னையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய மாநில சுயாட்சி கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றி சிறப்பித்தீர்கள். அன்று தாங்கள் என்னிடம், 1957-ம் ஆண்டு கேரள அரசில் தாங்கள் அமைச்சராக இருந்தபோது, கேரளாவுக்கு அரிசி, காய்கறிகள், பழங்கள், பால் தருகின்ற தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை தர வேண்டும் என வலியுறுத்தியதாக குறிப்பிட்டீர்கள். தங்களுடைய தொலைநோக்கு பார்வையை எண்ணி நான் மகிழ்ந்தேன். ஆனால் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற மனிதச் சங்கிலியில் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனோடு தாங்கள் கைகோர்த்து நின்ற செய்தியை அறிந்தபோது நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அறிவும், ஆற்றலும் நிறைந்த பெருந்தகையாகிய தாங்கள் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் உண்மை நிலையை ஆராய்ந்து உணர்ந்து இருக்க வேண்டும். மிட்டல் மற்றும் பிரார் ஆகியோர் தலைமையில் உச்சநீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழுக்கள், முல்லைப்பெரியாறு அணையின் உறுதித்தன்மையை ஆய்வுகள் நடத்தி சோதித்து அறிந்து பென்னி குக் கட்டிய அந்த அணை 1979-ம் ஆண்டுக்கு முன்பே வலுவாகத்தான் இருக்கின்றது என்பதை உறுதி செய்து அறிவித்து உள்ளது. அதற்கு மேலும் கடந்த 30 ஆண்டுகளாக தமிழக அரசு பல புதிய தொழில்நுட்பங்களை கொண்டு முல்லைப்பெரியாறு அணையை வலுப்படுத்துகின்ற பணிகளை செய்து இருக்கின்றது. எனவே, 7 ரிக்டர் அளவுக்கு நில நடுக்கம் ஏற்பட்டாலும், முல்லைப்பெரியாறு அணை அதை தாங்கி நிற்கும்.
ஆனால் கேரளத்தில் அக்கறையுள்ள சில அரசியல் சக்திகள் தவறான பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு கேரள மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர். முல்லைப்பெரியாறு அணையை உடைத்து நொறுக்கவும் தூண்டி விட்டு உள்ளனர். நாங்கள் கேரள மாநிலத்தோடு நட்பு உறவையை விரும்புகிறோம். ஆனால், தங்களை போன்ற மதிப்பிற்கு உரியவர்கள் முறையற்ற ஒரு போராட்டத்தில் பங்கேற்றதை அறிந்து வருந்துகிறோம். ஒரு நீதிபதியாகிய தாங்கள், 2 மாநிலத்திற்கும் பொதுவாகவே நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு வைகோ தனது கடிதத்தில் கூறியுள்ளார்.         
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago