முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்துறை செயலாளர் முன் ``டேம் 999'' பட இயக்குனர் ஆஜர்

செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, டிச.13 - உள்துறை செயலாளர் முன் டேம் 999 பட இயக்குனர் ஆஜராகி, திரைப்படம் குறித்து விளக்கம் அளித்தார். முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தமிழ்நாடு​ கேரள மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.   முல்லைப் பெரியாறு அணையை மையமாக கொண்டு கேரளாவைச் சேர்ந்த சோஹன்ராய் டேம் 999 என்ற பெயரில் திரைப்படம் தயாரித்து உள்ளார்.  இதில் அணை உடைந்து பலர் பலியாவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இந்த படம் கடந்த மாதம் 25​ந்தேதி தமிழ்நாட்டில் திரையிடப்பட இருந்தது ஆனால் இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து டேம் 999 படத்தை தமிழ்நாட்டில் திரையிட 2 வார காலத்துக்கு தமிழக அரசு தடை விதித்தது. பின்னர் மேலும் 2 வாரத்துக்கு தடை nullநீட்டிக்கப்பட்டது.   இந்த தடை உத்தரவை எதிர்த்து பட இயக்குனர் சோஹன்ராய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தங்கள் தரப்பு நியாயங்களை தமிழக உள்துறை செயலாளர் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும் சூழ்நிலை ஏற்படும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியிருந்தார்.    நீதிமன்ற உத்தரவுபடி சோஹன்ராய் நேற்று காலை சென்னை வந்தார். எழும்nullரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கினார். நேற்று காலை ஓட்டலில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கோட்டைக்கு வந்தார். 2-வது மாடியில் உள்ள உள்துறை முதன்மை செயலாளர் ரமேஷ்ராவ் மிஸ்ராவ் முன் காலை 10.38 மணிக்கு ஆஜர் ஆனார். அவருடன் அவரது வக்கீலும் சென்றிருந்தார்.  11.50 மணிவரை உள்துறை செயலாளரிடம் டேம் 999 பட காட்சிகள் குறித்து சோஹன்ராய் விளக்கினார். மோகன்ராய் வருகையையொட்டி கோட்டையிலும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்