அதிபர் கடாபி உடனடியாக பதவி விலக வேண்டும்-ஒபாமா

ஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011      உலகம்
obama 3

வாஷிங்டன்,மார்ச்.- 13 - லிபியாவின் அதிபர் கடாபி வரலாற்றின் தவறான பக்கம் இருக்கிறார். அதனால் அவர் உடனடியாக அதிபர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.  எகிப்தை அடுத்து ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதி நாடுகளில் ஒன்றான லிபியாவில் அதிபர் கடாபிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்களை ஒடுக்க கடாபி ராணுவத்தை ஏவி வருகிறார். இதனால் லிபியாவே கொந்தளிப்பான நிலையில் உள்ளது. அதனால் லிபியாவில் அமைதி திரும்பி அங்கு ஜனநாயக முறையில் ஆட்சி அமைய அதிபர் பதவியில் இருந்து அதிபர் கடாபி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று ஒபாமா மீண்டும் வலியுறுத்தியுள்ளார். 

லிபியா நாட்டு மக்கள் அதிகமான சுதந்திரத்தை விரும்புகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அடக்கி வந்தவரை ஆட்சியில் இருந்து நீக்க மக்கள் விரும்புகிறார்கள் என்று வாஷிங்டன்னில் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஒபாமா கூறினார். கடாபியை பதவியில் இருந்து நீக்குவதற்காக லிபியாவின் எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினர்களுடன் ஆலோசனையை விரைவில் தொடங்க உள்ளோம் என்றும் ஒபாமா மேலும் கூறினார். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: