முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் தேர்தல்: புடினுக்கு கடும் போட்டி

புதன்கிழமை, 14 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, டிச.14 - ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் பிரதமர் விளாடிமிர் புடின் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கோடீஸ்வரர் ஒருவர் போட்டியிடுகிறார். இதனால் புடினுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போது பிரதமராக உள்ள விளாடிமிர் புடின் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மக்கள் ஆதரவு பெற்ற பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த நிலையில் மிகைல் பிரோகோரோவ் என்ற தொழில் அதிபர் அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இவர் நியூ ஜெர்சி நெட்ஸ் என்ற கூடைப்பந்து அணியை நடத்திவருகிறார். 

இதுகுறித்து மிகைல் கூறுகையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் விளாடிமிர் புடினை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன். எனது வாழ்க்கையில் நான் எடுத்த முக்கிய முடிவாக இதை கருதுகிறேன் என்றார். 

தற்போது நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சி வெற்றிபெற்றாலும் அந்த கட்சிக்கு கிடைத்த ஓட்டு சராசரி மிகவும் குறைந்துள்ளது. கடந்த தேர்தலைவிட புடின் கட்சி 15 சதவீத ஓட்டுக்களை குறைவாகவே பெற்றுள்ளது. இதிலிருந்து புடின் கட்சிக்கு செல்வாக்கு குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் தில்லுமுல்லுகள் மூலமாகவே பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதாக மக்கள் போராட்டமும் நடந்தது. இந்த நிலையில் அதிபர் தேர்தலில் புடினை எதிர்த்து தொழிலதிபர் களத்தில் இறங்குவது அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்