முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட்டில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன்: ரோகித்

புதன்கிழமை, 14 டிசம்பர் 2011      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, டிச. 14 -  இந்திய அணியில் இடம் பெற்று டெஸ்ட் போட்டியில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன் என்று இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரோகித் சர்மா தெரிவித்து இருக்கிறார். இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரமான ரோகித் சர்மா சமீ பத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒரு நாள் தொடரில் சிறப்பாக ஆடினார். அந்தத் தொடரில் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித் தார். தனது அபாரமான பேட்டிங் மூலம் சர்மா மொத்தம் 305 ரன்னைக் குவித்து அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றார். 

இரு அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதிலும் இந்திய அணி வெற் றி பெற்று தொடரை 4- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்தப் போட்டியின் நாயகனாக மனோஜ் திவாரியும், தொடர் நாயகனாக ரோகித் சர்மாவும் தேர்வு பெற்றனர். போட்டியின் முடிவில் நிருபர்களைச் சந்தித்த ரோகித் சர்மா தெரிவித் ததாவது - மே.இ.தீவுக்கு எதிரான இந்தத் தொடருக்கு நான் கடுமையான பயிற்சி மூலம் தயாராக இருந்தேன். 

அதனால், தான் சிறப்பாக ஆடி இருக்கிறேன். நான் எப்போது போட் டியில் ஆடினாலும், 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பேன். அதே போல இந்தப் போட்டியில் ஓரளவு திற மையாக ஆடினேன். 

எனக்கு டெஸ்ட் போட்டியிலும் ஆட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது. அந்த கனவு நனவாகும் என்று எதிர்பார்க்கிறேன். இதற் காக எல்லா முயற்சிகளையும் செய்வேன். தற்போது எனக்கு 25 வய தாகிவிட்டது. 

டெஸ்ட் போட்டிக்கு செல்வதற்கு இது தான் சரியான வயது என கருது கிறேன். டெஸ்ட் போட்டியில் ஆடுவவது என்பது மிகவும் பொறுப் பான செயல். இனிவரும் போட்டிகளில் இன்னும் அதிக கவனம் செலு த்தி ஆடி நல்ல பெயரை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். 

எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் நான் கைவிட மாட்டேன். எனது முன்னேற்றத்திற்காக ரஞ்சிக் கோப்பை போட்டி மிகவும் உதவியாக இருந்தது. மே.இ.தீவுடன் நடந்த போட்டிகளில் சில தவறுகளை செய்தேன். அதி லிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டேன். 

இந்த ஆட்டம் என்னை ஊக்கப்படுத்துவதாக உள்ளது. ஆஸ்திரேலிய போட்டியிலும் சிறப்பாக ஆடுவேன் என்று எதிர்பார்க்கிறேன். இவ் வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்