முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக மக்கள் மீது கேரளாவினர் வன்முறை தாக்குதல்

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

போடி டிச.14 - முல்லைப்பெரியார் அணை விவகாரம் குறித்து உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து கேரளாவில் வசித்து வரும் தமிழர்களை, கேரளாவை சேர்ந்தவர்கள் ஆபாசமாக பேசி, அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இதனால் உயிருக்கு பயந்து யாருக்கும் தெரியாமல் கால் நடையாக காட்டு பாதையில் உயிர் தப்பி வந்தவர்கள் தமிழகத்தில் உள்ள உறவினர் வீடுகளிலும், உறவினர் வீடு இல்லாதவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திலும் தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும் கேரளாவில் படிக்கும் தமிழக மாணவ-மாணவியர்களின் எதிர்காலமும் கேள்வி குறியாகி உள்ளது. கேரளாவில் இவர்களுக்கு சொந்தமான உள்ள வீடு, தோட்டம், உள்ளிட்ட சொத்துக்கள் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் கேரளாவில் உள்ள தமிழர்களை காப்பாற்றுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், நெடுங்கண்டம் அருகில் உள்ள காரித்தோடு கிராமத்தில் உள்ள தமிழக மக்கள் மீது கேரளாவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர் இதில் சிலருக்கு ரத்தக்காயமும், பலருக்கு ஊமைக்காயமும் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட தமிழக மக்கள் தங்களது குழந்கைகளுடன் உயிருக்கு பயந்து இரவோடு இரவாக காட்டு பாதை வழியாக, தேனிமாவட்டம், போடி அருகே உள்ள கோணம்பட்டியில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதே போல் கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பன்சோலையில் வசித்து வந்த தமிழர்களை, கேரளாவை சேர்ந்தவர்கள் ஆபாசமாக பேசி, அடித்து துன்புறுத்தி வருகின்றனர். இதனால் உயிருக்கு பயந்து யாருக்கும் தெரியாமல் கால் நடையாக காட்டு பாதையில் தப்பி வந்துள்ளனர். அவ்வாறு உயிர் தப்பி வந்தவர்கள் போடி வட்டாட்சியர் அலுவலகத்திலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இவ்வாறு தஞ்சம் புகுந்தவர்களுக்கு உணவு மற்றும் தங்குவதற்கான இடவசதிகளை வட்டாட்சியர் நாகமலை செய்து கொடுத்தார். 

கேரளாவில் உள்ள தமிழர்கள் அடித்து துன்புறுத்து குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்