முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா தலைசிறந்த நாடாக 5 துறைகள் வளர்ச்சியடைய வேண்டும்

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

தாம்பரம், டிச.15 - கல்வி, சுகாதாரம், தகவல் தொழில் நுட்பம் உட்பட 5 துறைகள் வளர்ச்சியடைந்தால் இந்தியா 2020-ல் தலை சிறந்த நாடாக உருவாகும் என்று முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், வேல்ஸ் பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் குறிப்பிட்டார். இது குறித்து விபரம் வருமாறு:-

சென்னை அடுத்துள்ள பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கலந்து கொண்டார். இதில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனர் வாழ்வியல் மற்றும் மனித வள விஞ்ஞானி பிரபல பரத நாட்டிய கலைஞர் பரத கலாஞ்சலி அமைப்பு நிறுவனர் வி.பி.தனஞ்செயன் மற்றும் இந்திய சமையல் கலை வல்லுனர்கள் சங்கத்தின் பொது செயலாளர் செளந்தரராஜன் ஆகிய மூன்று பேருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாள் 10 ஆண்டு காலமாக 1.2. கோடி இளைஞர்களை சந்தித்து பேசி உள்ளேன். ஒவ்வொரு இளைஞர்களும் தனித்திறமையுடன் வாய்ப்புகளை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பெற்றோர்கள் பக்கத்து வீட்டு பையனை பார் அவனை மாதிரி நீ படிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர். அப்படி வற்புறுத்தாமல் இளைஞர்கள் தனித்திறமையோடு வளர விடவேண்டும். இளைய சமுதாயத்தினர் தொலைநோக்கு பார்வையுடன் வளர வேண்டும். அதற்கு 10 தூண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். நகர் புறமும், ஊரகமும், வித்தியாசம் இல்லாத வகையில் இணையவேண்டும். எரி சக்தி, தரமான சூழ்நிலை, விவசாயம், தொழில் ஒத்துழைப்பு, தரமான கல்வி ஆகியவை அனைவருக்கும் கிடைக்கவேண்டும்.

நம்நாடு உலகத்திலேயே தலை சிறந்த நாடு அறிவு ஜீவிகள். விஞ்ஞானிகள், முதலீட்டார்கள் ஆகிய உதவியுடன் இதை செயல்படுத்தவேண்டும். மக்களுக்கு தரமான சுகாதார கிடைக்கவேண்டும். ஒரு அரசாங்கம், பொறுபுள்ள ஊழலற்ற அரசாங்கமாக இருக்கவேண்டும்.

இந்தியா 2020-ல் தலை சிறந்த நாடாக வேண்டும். இந்தியா தன்னிறைவு அடைவதற்கு 5 முக்கிய துறைகள் வளர வேண்டும். கல்வி, சுகாதாரம், தகவல் தொழிற்நுட்பம் தரமான மின்சாரம், தரை வழி போக்குவரத்து, உயர்ந்த தொழில்நுட்பம் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் இந்தியா 2020-ல் இந்தியா தலைசிறந்த நாடாக உருவாக முடியும். தேசிய பாதுகாப்பு அடைய முடியும். 21-ம் நூற்றாண்டு அறிவு சார்ந்த நூற்றாண்டு ஆகும்.

நீங்கள் ஒரு தனித்தன்மை பெற்றவராக இருக்க வேண்டுமானால் ஒரு பெரிய லட்சியம் பெற்ற நபராக இருக்கவேண்டும். சிறிய லட்சியம் பெற்றவராக இருந்தால் நாம் அறிவை வளர்த்துக் கொள்ளவேண்டும். கடுமையான உழைப்பு செய்யவேண்டும், தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாது என்று கூறினார்.

துணை வேந்தர் ராமசந்திரன் அனைவரையும் வரவேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்