முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைத்து பொருட்களையும் தரத்துடன் வழங்க அறிவுரை

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.15 - தமிழக முதலமைச்சாரின் வழிகாட்டுதலின் ஆணைப்படி (14-ந் தேதி) நேற்று சென்னை​எழிலக கட்டிடத்தில் உள்ள உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளார் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகாவோர் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சென்னை நகர உதவி ஆணையாளர்கள் பணி ஆய்வு கூட்டம் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் அரசுச் செயலாளார்,  கூட்டுறவு, உணவு மற்றும் நுகாவோர் பாதுகாப்புத் துறை நிர்மலா, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளார் பஷீர் அஹமது மற்றும் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், சென்னை நகர துணை ஆணையாளார் (நகரம்) வடக்கு/தெற்கு உதவி ஆணையாளர்கள் கலந்து கொண்டார்கள்.

ஆய்வுக் கூட்டத்தில் உணவுத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட அறிவுரைகளை வழகினார்கள். தமிழக முதலமைச்சார் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் விலையில்லா அரிசி உட்பட அனைத்து அத்தியாவசிய பொருள்களும் நல்ல தரத்துடன் வழங்க வண்டுமென கண்டிப்பான அறிவுரைகள் வழங்கியுள்ளதை சுட்டிக் காட்டி அலுவலர்கள் பொது விநியாகத்திட்ட செயல்பாடுகளை செம்மையாக ஆற்றி தரமான அத்தியாவசிய பொருள்களை நியாய விலை அங்காடிகள் முலம் அட்டைதாரர்களுக்கு விநியாகம் செய்யப்படுவதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும். நியாய விலை அங்காடிகளில் அனைத்து அத்தியாவசிய பொருள்களும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு தகுதியும், தேவையுமுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது குடும்ப அட்டைக்கு உரிய தகுதியான அளவினை எந்தவித இடர்பாடும் இன்றி வழங்க வேண்டும்.

நியாய விலை அங்காடிகள் அனைத்தும் பணி நாட்களில் பணி ரேரங்களில் திறக்கப்பட்டு அத்தியாவசிய பொருள்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதை அடிக்கடி ஆய்வு செய்து உறுதி செய்துக் கொள்ள வண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்கள் உரிய அளவில் எடைகுறைவின்றி வழங்கப்படுவதை உறுதி செய்து கொள்ள வண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது புகார்கள், ஆலாசனைகளை தெரிவிக்க ஏதுவாக உணவுத் துறை அமைச்சர், அரசுச் செயலாளர் ஆணையாளர் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகார்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் இணைப்பதிவாளர்கள், முதுநிலை மண்டல மேலாளர்கள், துணை ஆணையாளர் (நகரம்) வடக்கு/தெற்கு வட்ட வழங்கல் அலுவலர்கள், உதவி ஆணையாளர்கள் ஆகியோரின் தொலைபசி எண்கள் அனைத்து நியாய விலை அங்காடிகளிலும் குடும்ப அட்டைதாரர்கள் நன்கு அறியும் வண்ணம் தெளிவாக எழுதி வைக்கப்பட வேண்டும்.

எரிவாயு இணைப்பு பெற்றுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரங்களை அந்த குடும்ப அட்டைகளில் முத்திரையிட்டு அவ்வாறு சேமிக்கப்படும் மண்ணெண்ணெயை எரிவாயு இணைப்பு இல்லாத குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுதல் ஏதுமின்றி பகிர்ந்து வழங்குவதற்கு முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது விநியோகத்திட்ட அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் குறித்து தகவல் சேகரித்து அத்தகைய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வண்டும். என்பது உட்பட பல அறிவுரைகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்