முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சர்வரை போலீசார் கைப்பற்றினர்

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.15 - தேர்வானையை ஊழல் 3-வது கட்டச் சோதனையை அடுத்து டி.என்.பி.சி அலுவலக கம்ப்யூட்டர் சர்வர்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி உள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ததில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேர்வாணைய தலைவர் செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்கள் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம், ஹால் டிக்கெட்டுகள், பணி நியமன ஆணை ஆகியவை சிக்கியது. இதன் தொடர்ச்சியாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரியின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அதிகாரிகளின் வங்கி லாக்கர்களில் கிலோ கணக்கில் நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இப்படி தேர்வு செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கப்பட்டது அம்பலமாகியுள்ளது. இதற்கான இடைத்தரகர்களாக அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் செயல்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இப்படி புரோக்கர்களாக வலம் வந்த 42 பேரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முன்தினம் 3-வது கட்டமாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் 14 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. 

நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்குள்ள கம்ப்யூட்டர் சர்வர் அறையை nullட்டி சீல் வைத்தனர். நேற்று கம்ப்யூட்டர் நிபுணர்களின் உதவியுடன் இந்த அலுவலகத்தை திறந்து பார்த்த போலீசார் கம்ப்யூட்டர் சர்வரை கைப்பற்றினர். டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம் முழுவதும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணியும் கம்ப்யூட்டர் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தின் மொத்த கம்ப்யூட்டர் செயல்பாடுகளும் இந்த சர்வரில்தான் அடங்கியுள்ளது. இதனை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதன் முடிவில் தேர்வாணைய ஊழல் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்ப்யூட்டர் சர்வருடன் 6 ஹார்ட்டிஸ்க்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தடயவியல் சோதனைக்குத் உட்படுத்தப்பட உள்ளது. தேர்வாணைய ஊழல் தொடர்பாக 3 கட்ட சோதனைகள் முடிந்துள்ள நிலையில் புரோக்கர்களாக செயல்பட்ட அரசியல்வாதிகள் சிலரும் போலீஸ் வலையில் சிக்கியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago