முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் திறப்பு

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,டிச.15 - மதுரை அண்ணாநகரில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தை கருமுத்து கண்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.  சமீபகாலத்தில் இந்தியாவில் நீரிழிவு நோய் மிக வேகமாக பரவுகிறது என்பது கண்கூடான ஒன்றாகும். 2011 -ல் 62 மில்லியனாக இருந்த இந்த எண்ணிக்கை வரும் 2025 ம்ஆண்டில் 100 மில்லியனாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக 50 சதவீதம் மக்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு குறைபாடு உள்ளது என்பது தெரியாமலேயே உள்ளார்கள்.  குழந்தைகள்கூட இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 1991 -ம் ஆண்டு சென்னை, கோபாலபுரத்தில் துவக்கப்பட்ட டாக்டர் .மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் உலகத் தரம்மிக்க நீரிழிவிற்கான சிகிச்சையை வழங்கி வருகின்றது. உலக அளவிற்கு நன்கு புகழ்பெற்ற நீரிழிவு சிகிச்சை நிபுணரும், இம்மையத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் வி.மோகன் மற்றும் அனைவராலும் நன்கு அறிந்த கண் மருத்துவர் அவரது காலஞ்சென்ற மனைவி டாக்டர் ரெமா மோகன் ஆகிய இருவராலும் இம்மையம் துவங்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் வெற்றிகரமாக வளர்ச்சியடைந்து கடந்த 20 ஆண்டுகளில் 2,60,000-ற்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு இம்மையம் சிசிச்சையளித்துள்ளது. இது உலகிலேயே விரைவான வளர்ச்சியுடன் செயல்பட்டு வரும் ஒரு நீரிழிவு சிகிச்சை மையமாகும்.  டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் கிளைகள் சென்னை, வேலூர், காஞ்சிபுரம்  ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக மதுரை அண்ணாநகரில் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையம் நேற்று திறக்கப்பட்டது. இதன் திறப்புவிழா நேற்று மாலை மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள பார்ச்சூன் பாண்டியன் ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் டாக்டர் பி.நம்பெருமாள்சாமி தலைமை வகித்தார். விழாவிற்கு வந்திருந்தோர் அனைவரையும் மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மோகன் வரவேற்றுப் பேசினார். இந்த விழாவில் மதுரை தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குனர் கருமுத்து தி.கண்ணன் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தை துவக்கிவைத்தார். விழாவில் கலந்துகொண்ட டாக்டர் ஆர்தர் ஜோசப் ஆசீர்வாதத்திற்கு வாழ்நாள் சாதனையாளருக்கான சிறப்பு விருதும், சான்றிதழும் டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் சார்பில் வழங்கப்பட்டது. இதேபோல் டாக்டர் ஜி.சந்திரமோகனுக்கு நீரிழிவுத்துறையில் சிறந்த பணியாற்றியதற்காக கெளரவ விருதும், சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் மையத்தின் துணைத் தலைவர் தணிகைமணி, மையத்தின் உதவி நிர்வாக இயக்குனர் டாக்டர் அஞ்சனா, உபதலைவர் டாக்டர் ரஞ்சித் உன்னிக்கிருஷ்ணன்,  டாக்டர்கள் எஸ்.ரவிக்குமார், ஏ.கண்ணன், வி.என்.ராஜசேகரன், முதன்மை நிர்வாக அலுவலர் ரேகா தங்கப்பன், மையத்தின் துணை பொது மேலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

விழாவில் மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் வி.மோகன் பேசுகையில், நீரிழிவு நோய்க்காக உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை கொடுக்கும் வகையில் எங்களது மையம் செயல்பட்டு வருகிறது. நீரிழிவு சிகிச்சைக்கான வசதிகள் அனைத்தும் நியாயமான செலவில் எங்களது மையத்தில் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்த மக்கள் தொகையின் அடிப்படையில் 2.7 லட்சத்திற்கும் மேலான மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது கிடைத்த புள்ளி விபரங்களின் அடிப்படையில் 3 லட்சம் மக்கள் மதுரை மாவட்டத்தில் நீரிழிவு நோயோடு இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. மதுரையில் எங்களது நீரிழிவு மையத்தில் எக்ஸ்ரே, இ.சி.ஜி. அதிநவீன வசதிகளுடனான ஆய்வுக்கூடம், உணவு ஊட்டச்சத்துத்துறை, நீரிழிவு உடல்நல சிறப்பு சமையல்கூடம், உணவு விடுதி, நோயாளிகளுக்கு கல்வி பயிற்சித்துறை போன்ற அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி உள்ளது. எனவே எங்கள் மையத்தில் சிறப்பான முதன்மையான சிகிச்சை நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago