முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வந்தவாசி அருகே வேன் மீது கரும்பு லாரி மோதி 5 பேர் சாவு

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

வந்தவாசி.டிச.15 - வந்தவாசி அருகே மினி லாரியும், கரும்பு லாரியும் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியாயினர் மற்றும் 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வந்தவாசி அடுத்த ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஊராட்சி மன்ற துணை தலைவர்கருணா மூர்த்தி என்பவருக்கு நேற்று முன்தினம் திருமணம் நடக்கவுள்ளதை முன்னிட்டு அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் சுமார் 30 பேரை மினி லாரியில் ஏற்றிக்கொண்டு வந்தவாசி - சேத்துப்பட்டு சாலையில் சென்றுகொண்டிருந்த போது,  எதிரே கரும்புலோடு ஏற்றிவந்த லாரி மோதி மினி லாரி கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2 பேரும் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு செல்லும் வழியில் ஒருவரும் என 5 பேர் பலியாயினர். பலியானோர்களின் விவரம் 1) பூங்காவனம், (50), பிச்சாண்டி (45), வடிவேலு (50), லலிதா (45), சாந்தி (41) அனைவரும் ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களைத் தவிர டிரைவர் உள்பட 19 பேர் மேல்சிகிச்சைக்கா செங்கல் பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.எஸ்.பி.மகேந்திரவர்மன், இன்ஸ்பெக்டர் நரசிம்மன், எஸ்.ஐ.தயாளர் உள்பட பலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் மற்றும் இறந்த உறவினர்ளுக்கு வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் கே.குணசீலன் மற்றும் செஞ்சி எம்.எல்.ஏ கணேஷ்குமார் ஆகியோர் ஆறுதல் கூறினர். அப்போது உடன் வந்தவாசி ஒன்றியக்குழு தலைவர் குப்புசாமி, பெரணமல்லூர் குழு தலைவர்செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் லோகேஷ்வரன், சக்கரபாணி உள்பட பலர் இருந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆறுதலும், உதவியும் செய்துவந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்