முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முல்லை பெரியார் அணை பிரச்சனையை உடனடியாக தீர்க்க வேண்டும்

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

தேனி -டிச,14 - முல்லை பெரியார் அணை பிரச்சனை தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பகவதியம்மன் கோவில் திடலில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், மாநில பொதுகுழு உறுப்பினர் முருகேசன், மற்றும் தேனி,திண்டுக்கல்,ராமநாதபுரம்,சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாககுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். தலைமை ஏற்று பேசிய விஜயகாந்த் முல்லைபெரியார் அணைதண்ணீரை குடித்துதான் வளர்ந்துள்ளேன். முல்லைபெரியார் அணையை வெள்ளைகாரர் கர்னல்பென்னி குயிக் தனது சொத்து எல்லாம் விற்று அணையைகட்டினார். அவர் இப்பகுதி மக்கள் வாழ்வையும் விவசாயத்திற்கு தண்ணீர் தேவையையும் அறிந்து கட்டினார். ஆனால் கேரள அரசு பெரியார் அணை பலவீனமாக உள்ளது என்று பொய்யான தகவல் தந்து அணையை உடைக்க முயற்சிக்கிறது. எனவே பெரியார் அணை பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இரு மாநில பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த ஒரு வார காலமாக பெரியார் அணை பிரச்சனைக்கு பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுவருகிறது. இப்பிரச்சனைக்கு மத்திய அரசு உடனடியாக ராணுவ படையை அனுப்பி இரு மாநில பிரச்சனை முடியும் அணையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அணை பிரச்சனையில் மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதை தவிர்க்க தமிழக எம்.பி.க்கள் 39 பேர்கள் பதவிகளை ராஜினமா செய்யவேண்டும். அப்படி செய்தால் தமிழகத்தில் எங்கள் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினமா செய்யதயார். கட்சி, ஜாதி, மாதம் பாராமல் 5 மாவட்ட விவசாயிகளைகாப்பாற்ற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசினார். தேனி நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மேடையில் பேசும்போது அவருடைய பேச்சை கேட்க தொண்டர்கள் முண்டியடித்து வருவதை பார்த்து உட்காருங்கடா என்று அடிக்கடி மிரட்டினாா.;

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis